காட்சி—4

காட்சி 4·46 காட்சிகளில்

(கல்யாணி தன் கணவனோடு மாங்குயில் கூவும் சோலையில் பைந்தமிழ் பண்பாடி மகிழ்தல்)

தங் : இவ்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் என் இதய ராணி ரூபம்

கல் : இந்த தீபத்திலே சுடராய் திகழ்வதன் தீரனின் ரூபம்

தங் : இள மாமயில் ரூபம்

கல் : இவ்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் நம் காதல் தீபம்

தங் : கனியே! கன்னல் தமிழே அமுதே பனி தூங்கும் மலரே! நிலவே

கல் : கனிவான மொழியால் என்னையே கவர்ந்தீரே காந்தச் சிலையே

தங் : உனைக் காணும்போது நெஞ்சில் ஊறிடும் உணர்ச்சி தனையே எழுதுவோர் எழுத்தும் இல்லையே

இரு : திருநாளிதுபோல் தினம் ஆடிப்பாடியே தேன்போல் வாழ்வோம் (இல்