காட்சி 9

Scene 9

10 பகுதிகளில்

## காட்சி 9. (தன் மகள் மானத்தையும், தன் மகன் உயிருக்கும் எமனாக இருந்தது துர்ஜயன்தான் என்பதை தன் மகள் முத்தம்மாளின் மூலம் அறிந்த காளிங்கன் அவன் சூழ்ச்சிகளை வெளிப்படுத்த அரண்மனை செல்கிறான். கோபதிவர்மன், காண்டிபனுக்குத் தீர்ப்புக் கூறிவிட்டு அந்தப்புரத்திலிருக்கிறான்.) கோபதி:- ரௌத்திரன் உம்முடைய மகனா? எவ்வளவு பெரிய அக்கிரமம்! காளிங்:- அதைவிட அக்கிரமம் அன்பானந்தரைக் கொன்று அரண்மனைத் தோட்டத்திலே புதைத்துவிட்டு அரசியுடன் ஓடியதாக அபாண்டம் சுமத்தியது!... இதோ பாருங்கள், அன்பானந்தரின் எலும்புக்கூடு. அந்தப் புனித மூர்த்தியை நான்தான் புதைத்தேன். கோபதி:- எத்தனை பயங்கரச் சூழ்ச்சிகள்! காளிங்:- அந்தப் பாவியின் செல்வாக்கைப் பலப்படுத்தத்தான்! கோபதி:- ஆ! துர்ஜயனுடைய மோதிரம்! காளிங்:- அவசரத்தில் அதைக்கூடக்கவனிக்கவில்லை. (உண்மையை அறிந்த அரசன், காண்டிபனைக் காப்பாற்ற பலிபீடம் நோக்கி வருகிறான்.) தன்னை மானபங்கம் செய்த துர்ஜயனைப் பழிவாங்க, முத்தம்மாளும் தன்னை ஏமாற்றித் தன் மகனை இளவரசனாக்கி அவனைக் கொன்றான் என்ற கொதிப்பில் காளிங்கனும் பலிபீடம் நோக்கி வருகிறார்கள்.)