காட்சி 5

Scene 5

10 பகுதிகளில்

## காட்சி 5. ரௌத்ரன்:- கொக்கரிக்கும் குறிஞ்சிநாடே பெண் கிடையாது. போர்! மணிபல்லவரே உமது மாளிகையில், குறிஞ்சிநாட்டுக் கொடி பறக்கிறது. துர்ஜயன்:- அதோடு மருதநாட்டு மானமும் சேர்ந்து பறக்கிறது. ராணி:- மார் தட்டிக்கொள்ளாதீர்கள். நின்று எதிர்க்க முடியாத கோழைகள்! துர்ஜயன்:- அன்று கடல்மடை திறந்தாற்போல் கர்ஜித்தாயே! இதோ பார் நீ அலட்சியப்படுத்திய ஆணழகன்! உன்னை அடிமையாக்க வந்திருக்கிறான்! வீராதிவீரனாக! வெற்றிச் சிங்கமாக! (சிரிப்பு) உன் வாழ்க்கைத் துணைவனாக! ராணி:- வஞ்சக நரிகள்! புலியைக் கூண்டில்போட்டு பூட்டிவிட்டு போர் பிரசங்கம் செய்யும் சோதாக்கள்! துர்ஜயன்:- உன் புலம்பலைக் கேட்க நேரமில்லை. மணத்திற்கு உன் சம்மதம் அல்லது மணிபல்லவனின் மரணம்! மணி:- ராணி! சம்மதிக்காதே, என்னைச் சித்திரவதை செய்தாலும் சரி! என்னை நெருப்பில் தள்ளி பொசுக்கினாலும் சரி! என் பிணத்தை காக்கைக்கும் கழுகிற்கும் விருந்தாக்கி, அந்தக் காட்சியை உனக்குக்காட்டினாலும் சரி இந்த சண்டாளனை மணக்கச் சம்மதிக்காதே. துர்ஜயன்:- சம்மதிக்க வைக்கிறேன்! இப்போது என்ன சொல்கிறாய்! ராணி:- வேண்டாம், விடுங்கள். துர்ஜயன்:- முடியாது! நீ மணத்திற்கு சம்மதித்தாலன்றி விடமுடியாது. ராணி:- சம்மதித்தேன். அவரை விடுங்கள்! துர்ஜயன்:- நாளைக்கு பயணம், தயாராகிக்கொள்! அதற்குள் நீ தப்ப முயன்றால் உன் தந்தையின் தலை தரையில் உருளும் ஜாக்கிரதை! இவனைப் பாதுகாப்பில் வையுங்கள்!