காட்சி 4
Scene 4
10 பகுதிகளில்
## காட்சி 4. கோபதி:- போர்! மருதநாட்டானுக்கு அவ்வளவு மண்டைக் கொழுப்பு. கடல் அலைகள்போல் நம்மிடம் படைகள் உண்டென்பது தெரிந்தும் களத்தில் இறங்கத் துணிந்துவிட்டான், கபோதி! இளவரசா! இன்றைக்கு யுத்த முஸ்திபுகள் ஆரம்பமாகட்டும். போர் தளவாடங்கள் புதுப்பிக்கப்படட்டும். ரௌத்ரன்:- இப்பொழுதே கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படையெடுப்புக்கு நான்தான் தளபதி. கோபதி:- மகிழ்ச்சி! மருதநாட்டு எல்லைக்கோட்டையை அழித்துவிடு. குறிஞ்சிநாட்டுக் கொடியை மணிபல்லவன் மாளிகையில் பறக்கவிடு. துர்ஜயன்:- கத்தி யில்லாமல் ரத்தம் சிந்தாமல் வெற்றி மாலை சூட வழி இருக்கும்போது........ ரௌத்:- என்ன மாமா வழி? துர்ஜயன்:- எதிரிகள் தூங்கும்போது படையெடுப்பது. மறைந்திருந்து தாக்குவது. இந்த போர் முறையில் ரத்தச்சிலவு அதிகமில்லை, ஆனால் மூளைக்குக் கொஞ்சம் வேலை. ரௌத்:- மாமா சொல்வது மகத்துவமான தத்துவம் கோபதி:- வெகு அருமையான தத்துவம். அவர் இஷ்டம்போல் நடக்கட்டும் துர்ஜயன்:- எனக்குத் திருமணம் இப்போது தேவை இல்லை. ராணி! அந்த அகம்பாவத்தை இப்போது பார்க்கிறேன்.