அறத்துப்பால் · இல்லறவியல் · விருந்தோம்பல்

குறள் 90விருந்தோம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடிவிடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 18 · ஸ்கேன் 51 · மூலமும் சான்றும்