அறத்துப்பால் · இல்லறவியல் · விருந்தோம்பல்

குறள் 82விருந்தோம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

மூலம் · அச்சுப் பக்கம் 17 · ஸ்கேன் 50 · மூலமும் சான்றும்