குறள் 55 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 11 · ஸ்கேன் 44 · மூலமும் சான்றும்