பிரிவு 3 / 11
ஒருதலைக் காதல் — 3
One-Sided Love — 3
தோழி பொற்கொடியைத் தூது விடுத்துக் காதல்தொடர்கதையைத் தொடங்கலாம் என்றிருந்தநற்கண்ணைக்குத் தேடிச்சென்ற செல்வம், அவளைநாடி வந்தது போல் நற்செய்தி வந்ததெனினும்,தந்தை சொன்ன மற்றோர் செய்தி; அவள்சிந்தையில் பெருங் குழப்பத்தை மூட்டியது!
பகைநாட்டு வேந்தொருவன் ஆமூரைக் கைப்பற்ற முதலில்பசுமந்தை மடக்குதற்குப் படையோடு வருகின்றா னென்றும்,அப்பகையை விரட்டுதற்கு ஆமூர்த் தலைவன்;ஆற்றலான் கிள்ளியினைத் தளபதியாய்அனுப்பிவைக்கத் திட்டமிட்டு வேண்டினான் என்றும்,கால்நடையைக் கவர்கின்ற பகை எதிர்த்து நடத்துகின்றகளப்போராம் ‘கரந்தை’ எனும் போருக்குக் கிள்ளி -நாளை மாலை முரசறைந்து புறப்படுவன் என்றும்,நற்கண்ணை வீட்டுக்கு விருந்துண்ண அதற்கிடையேவருவானென்றும்,பெருங்கோழிநாய்கன் முழுக்கதையும் முடித்தபின்தான்பெருமூச்சைப் புறந்தள்ளி உயிர்மூச்சு வாய்ப்பெற்று;நாவை அசைக்காமல் பாவை நற்கண்ணை,நெஞ்சுக்குள் தந்தைக்கு வாழ்த்துச் சொன்னாள்!
♦
தானுண்டு தன் வேலையுண்டு எனஇராப்பொழுதும் பகல் பொழுதும்தாரணியில் இயற்கையிட்ட கடமையினைஇடையறாது செய்து வந்தபோதிலும்தங்கள் தங்கள் நிலைக்கேற்பக் காதலர்கள்இரவு பகல் இரண்டினையும் ஏசுவதும்ஏற்றிப் போற்றுவதும் இயல்பேயன்றோ!மேனியிரண்டும் ஒன்றாகி மேதினியை மறந்திருக்கும் போதுஏனிந்த இரவுக்கு அதற்குள்ளே முடிவோட்டமெனமிகச் சினந்து குதிப்பாரும் உண்டு!பகல் எல்லாம் உள்ளத்தை வதைக்கின்ற தாபத்தைபடுக்கையிலே ஒரு கைபார்ப்போமெனச் சூளுரைப்போர்;அந்திமாலை வந்தவுடன் அகம் குளிர்ந்து,மந்திப் பகல் தொலைந்ததென்னும் மகிழ்ச்சியிலே - காதல்சந்திப்புக்குத் தோதாக வருகின்ற இரவுக்கு வாழ்த்துரைப்பார்!
இங்கு நற்கண்ணை நாயகியின் நிலையே வேறு!நுங்கு நிகர் நெடுங்கண்கள் விழித்தவாறு,
இரவெல்லாம் படுக்கையிலே உறக்கமின்றிநிமிர்ந்தும், சாய்ந்தும், புரண்டும், எழுந்தும்நினைவெல்லாம் கிள்ளியாக நிலைகுலைந்தாள்!
அதற்குள் இரவு முடிந்ததோ என்றுஅணைப்புக்குள் கிடப்பவர்கள் அதிர்வதுண்டு!ஆனால் இவளோ; ஏனிந்த ‘ஆமூர் இரவு’ மட்டும்ஆமைபோல் நகரத் தொடங்கிறதென அவட்டிக்கொண்டாள்!
‘ஆருயிராம் என் கிள்ளியினை வரவேற்கும் வாய்ப்புதனை;அதிகாலைக் கதிர் விரைவில் எழுந்தாலன்றோ பெறமுடியும்!இவ்வூர்ச் சேவலுக்கென்ன இருமலா? சளியா? காய்ச்சலா?இல்லையெனில் தொண்டையில்தான் அடைப்பேதும்உண்டா?இன்னும் என் ஊர்ச்சேவல் விடியலுக்குக் கூவவில்லை?இச் சோம்பேறிகள் கூவாவிடில் வைகறைதான் விழித்திடாதோ?தோழி எங்கே போய்விட்டாள்? அவளிருந்தால்கோழி போலக் கூவச் சொல்லிச் சூரியனை எழுப்பலாமே!’
மின்னல் கொடி மங்கை நற்கண்ணை மிக வருந்திப்பின்னல் சடை அவிழ்ப்பாள்; பின் முடிவாள்!என்ன நேர்ந்தது இந்தக் கிழமை மலருக்கு?ஏன் இன்னும் மலரவில்லையென ஓடிவாள்!
“தெள்ளமுதே! திருமகளே! தேனூறிய ஓவியமே!நள்ளிரவில் நீ மட்டும் தூங்காமல் துவள்வது ஏன்?”
கள்ளமிலா நெஞ்சத்துத் தாய், அவள் அருகே வந்துவெள்ளம்போல் அன்புதனைப் பொழிந்து கேட்டாள்!
“முள்ளொன்று காலில் தைத்தால் எளிதாகஎடுத்திடலாம் அம்மா! அந்தமுள்ளே நம் நெஞ்சில் தைத்துவிட்டால் எடுப்பதென்னஎளிதான செயலா தாயே?”
“உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுகின்றாய்மகளே! எனக்குச்‘சுள்’ என்று கோபம் வருவதற்குள் உண்மையைச்சொல்லிவிடு” என்றாள்!
“அன்னாய்! கேள்! அரிய பாடல் ஒன்றெழுதிநன்னாளாம் நாளை விருந்துக்கு வருகின்ற கிள்ளியிடம்பரிசாகத் தருவதற்குத் திட்டமிட்டுப்பறக்கின்றேன் கற்பனை வானில் சிறகடித்து!” என்றுபக்குவமாய்ப் பொய் கூறித் தாயை அனுப்பிவிட்டுபடுக்கைத் தலையணையில் மார்புமுத்திப் படுத்துக்கொண்டாள்!
கற்பனையெதுவும் கருத்தரிக்காக் காரணத்தால்கவிதையெழுதக் கண்ணுறக்கமின்றித்தவிப்பதாகத் தாயிடத்தில் பொய்யுரைத்துத்தப்பித்தாள் என்றாலும் நற்கண்ணை;தன்னிலையைக் சூசகமாய் விளக்குவதற்குப்பொன்மணியாய்க் கவிதையொன்றை ஓலையிலே தீட்டி,மார்புக் கச்சைக்குள் மறைத்து வைத்து,மறுநாள் கிள்ளி வந்தவுடன் தருவதற்குத்தயாராய்த்தான் காத்திருந்தாள் - அதை அறியாத
தாயார்தான் தன் மகளின் பேச்சை நம்பித்தலைசாய்த்தாள் கூடத்தில்! பாவம்; மகளின்நிலை அறியா வெகுளி அன்னை!
♦
இரவென்னும் இமைப் பேழையினைத் திறந்துகொண்டுவெள்ளை விழிப்பகல்; மெல்ல எட்டிப்பார்த்தவுடன்,
குறித்த நேரம் தவறாமல் ஊர்ச் சேவல் கூவியது!குணதிசையில் உதயசூரியனும் மேவியது!
♦
அலைகடலோடும் வணிகன் இல்லத்து அடுக்களையில்ஐந்தாறு பணியாட்கள் கூடி அமளிதுமளியாய் ஆடி ஓடினர்!“இலைகள் எல்லாம் தலைவாழையாய்இருக்கட்டு” மென்றாள் அன்னை!“குலைகுலையாய்க் கனிவகைகள் குவியட்டு” மென்றார் தந்தை!“கொத்துக் கறியை நெய் சொட்டச் சொட்ட வதக்குக”என்றாள் தோழி!“கோழிச் சப்பையில் மிளகுக்குழம்பிட்டு, நாமணக்கச்செய்திடுக” என்றாள் நற்கண்ணை!“சீரகச் சம்பா அரிசியை உலையிலிடுமுன்நீருடன் பாலையும் சரிபாதி கலந்திடுக” என்றாள் அன்னை!“கட்டித் தயிரைக் கையிலெடுத்தால் வெண்ணெய்உருண்டை போல இருக்க வேண்டு” மென்றார் தந்தை!“அப்பமுடன் ஆட்டுக்கால் எலும்புச் சாறூற்றிஊறவைத்து உருசியினைப் பெருக்கிடுக”என்றுரைத்தாள் நற்கண்ணை!“உப்பு மட்டும் போடுதற்கு மறந்திடாதீர்!உப்பில்லாப் பண்டமும் ஒருதலைக்காதலும்குப்பையிலே!” எனச் சொன்னாள் தோழி!
திடுக்கிட்டாள் நற்கண்ணை!தெப்பமென இன்பத் திருக்குளத்தில் மிதந்திட்ட நிலைமாறிஅப்படியே சோர்ந்து போனாள், அமங்கலச் சொல்கேட்டவுடன்!“தப்பு! தப்பு! பெண்ணே!” என்று தோழிதாடையிலே போட்டுக்கொண்டும், தணியவில்லைஅவள் கோபம்!
அழைக்கப்பட்டோர் எல்லாம் விருந்துக்கு வந்தபோதுஅன்புடனே வரவேற்று, அமரவைத்துப்பெருங்கோழிநாய்கன்; தன் துணைவிபெருந்தேவிநாச்சியையும்பெற்ற மகள் நற்கண்ணையுடன் உற்ற தோழிபொற்கொடியினையும்ஆமூர்த்தலைவனுக்கும் அடலேறு நற்கிள்ளிக்கும்அவர்களுடன் வந்திருந்த பெரும்புலவர் சாத்தந்தைக்கும்அறிமுகம் செய்துவைத்துப் புன்முறுவல் பூத்தபோது;பெருமாட்டியொருத்தியினைப் பெருநற்கிள்ளிபெருமை பொங்கச் சுட்டிக்காட்டி,“இவர்கள் யார் தெரியுமா உங்களுக்கு? - நான்,இளமையிலே தாயிழந்த குறைதீர்த்து - என்இன்னுயிர் காத்து இவ்வண்ணம் வளர்த்து விட்டகன்னித் தமிழ்க் கவியரசி காவற்பெண்டு இவர்தான்” என்றான்.கரங்குவித்து ஒருவருக்கொருவர் வணக்கம் செய்து,கனிந்த அன்பைப் பரிமாறிக்கொண்டு,விருந்தருந்தி முடித்தவுடன் விழியிமைகள் படபடக்க;வேங்கைநிகர்க் கிள்ளியிடம் விரைந்து வந்தாள் நற்கண்ணை!
“இங்கு வந்து எம் இல்லமும் உள்ளமும் நீவிர்இன்புறச் செய்தமைக்கு இதயத்து நன்றியினைஓலையில் ஒரு பாட்டாக ஆக்கியுள்ளேன்;ஓய்விருக்கும்போது படித்தால் போதும்!” என்றாள்.
பெற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில்படித்து விடுவானோ என நடுங்கி
முற்றாகத் தனைமறந்து நற்கண்ணை நின்றபோது;
“கொற்றவனே! கொடும்பகைவர் ஆமூர் நோக்கிகுதிரைப்படைகளுடன் வருகின்றார்” என்றுகட்கம் ஏந்திய காவலன் ஒருவன்காற்றெனக் கடிது ஓடிவந்தான்!
“படை வகுக்கப் பாசறைக்குப் போகின்றேன்விடை கொடுப்பீர்” என வணங்கி,புலிப்போத்து நடைபயிலும் நற்கிள்ளி,புயல் போலப் பாய்ந்திட்டான் புரவிமீது!ஆமூர்ப் பாசறைக்குள் சென்றவுடன் படைகளைஅணிஅணியாய்க் கிளம்புதற்கு ஆணையிட்டான்!அதற்கிடையே நற்கண்ணை தந்திட்ட கவிதையினை,அவசரமாய்ப் படிப்பதற்கும் முனைந்திட்டான்.
அந்த ஓலை இதுதான்:-
★ “என்னை புற்கையுண்டும் பெருந்தோ ளன்னேயாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே,போரெதிர்ந்து என்னை போர்க்களம் புகினே!கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்குஉமணர் வெரூஉம் துறையன் னன்னே!”
(புறநானூறு : பாடல் : 84பாடியவர் : நற்கண்ணையார்பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)
படித்துப் பார்த்தான் நற்கிள்ளி; அப்பாட்டைவடித்துப் பார்த்தான் எளிய நடைக் கவிதைவரியாக!
அது; இதோ:-
“ஏற்றமிகு உறையூர் நாடிழந்த என்தலைவன்:எளிய உணவருந்தி வாழ்கின்றானெனினும்,எதிரிகள் அஞ்சியோடும் வலிய தோளுடையான்!என் மனையோ அவன் வாழுமிடத்திற்குஅருகிருந்தும் என்ன பயன்? என்மென்தோளில் அவன் மேனிபடுவதற்கு வழியில்லை!அந்நாளை எதிர்பார்த்து என்னுடல் மிக வாடிப்பொன்போலும் பசலை நிறம் படர்ந்ததுவே!ஒப்பில்லா என் தலைவன் போருக்குச் சென்றாலோ;உப்பு வணிகர்களைப் பயந்தோட வைக்கின்றோமெனத்தற்பெருமையாய்ப் பேரூர்ப் போர் விழாவில்தருக்கித் திரியும் வீரர்கள் சிலர்;தம் வலியைத் தாமே இழப்பது போல்என் தலைவன் முன்னே வீரர்கள் வருந்திடுவர் அன்றோ?எதிர்த்தரப்பு வீரர்களை வருத்துதல் போல்என்னையும் என் தலைவன் வருத்துதல் நன்றோ?”
இவ்வாறு:நற்கண்ணை எழுதித்தந்த பாடலிலேநயம் மட்டும் காணவில்லை நற்கிள்ளி! அவள்சொற்கண்டு சொக்கிவிட்டால் சிக்கிக்கொள்வோமென்றுபயமுறுத்தி நெஞ்சத்தை அடக்கிவைத்தான்!“போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்;பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல!”
என்றோங்கி உயர்த்திப் பிடித்தான் வாளை - ஒருகுன்றேறி நின்று வீரர்களை அழைத்திட்டான் - அந்தக் காளை!
பொருள் விளக்கம் :என்னை = என் தலைவன். புற்கை = எளிய உணவு.புறஞ்சிறை = அருகில் உள்ள இடம்.பொன்னன் னம்மே = பொன்னிறமாய்ப் பசலை படர்ந்ததே.ஏமுற்றுக் கழிந்த மள்ளர் = தமது வலிவைத் தாமே புகழ்ந்துஇறுமாப்புற்று வலிவை இழந்திடும் வீரர்கள். உமணர் = உப்புவியாபாரம் செய்வோர்.
♦ ♦ ♦