பிரிவு 2 / 11

ஒருதலைக் காதல் — 2

One-Sided Love — 2

X
பெருங்கோழிநாய்கன் எனும் பெருவணிகன்பெற்றெடுத்த தமிழ்க் கொடிதான் நற்கண்ணைவான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும் சோழ நாட்டார்,கடல் கடந்தும் வாணிபம் பெருக்கியதால்காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில்நீரின் வந்த நெடுவேக குதிரைகளும்,காலின் வந்த கருமிளகு மூட்டைகளும்,வடமலையில் பிறந்திட்ட மணிக்குலமும் மின்னும் பொன்னும்,
குடமலையில் பிறந்திட்ட நறுமணச் சந்தனமும்அரும்புகை அகிலும்,தென்கடல் முத்தும், குணகடல் பவளமும்,கங்கையின் விளைவும், காவிரியின் பயனும்,ஈழநாட்டு உணவும், கடாரத்துப் பொருளும்,இன்னபிறவும் இறக்குமதி, ஏற்றுமதியெனக் குவிந்துதென்னகச் சீர்மை உயர்த்துதல் கண்டு,கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர்கரிகால் சோழனின் காலத்து வளமையெலாம்‘பட்டினப்பாலை’யாம் பழந்தமிழ்ச் சுவடியில்பதியவைத்துப் பாடினார் போற்ற வைத்தார்! - அந்தப்பெருமைசேர் வணிகர் வழிவழி வந்தவனாய்பெருங்கோழிநாய்கன் ஆமூரில் விளங்கினான், அன்று!
வணிகர் திலகம் வார்த்தெடுத்த வைரச்சிலை,வடிவழகி நற்கண்ணை கிளிமழலைப் பேச்சுக்காரி!ஒளியுமிழும் கண்களுக்கு உலகமே அடிமையாகும்!களிநடன மயிலசைவு; இடையில், நடையில்!
அழகிருக்குமிடத்தில் அறிவொளியும் இணைந்து விட்டால்அருவியிலாயிரம் தேன்குடம் உடைந்து கலந்ததுபோல்;அமிழ்தம்! அமிழ்தம்! அமிழ்தமன்றோ? - அவ்வாறேகமழ்ந்தாள் நற்கண்ணை; தமிழ் அமிழ்தக் கவியாக!
ஏட்டெடுத்து மலர்க்கரத்தில் எழுத்தாணி பிடித்துமாடேறித்துக் கொம்புதனை முறித்தது போல்ஆமூர் மல்லனையே வெற்றிகண்டு வீழ்த்திட்டஆணழகன் நற்கிள்ளி வீரத்தைப் பாட்டாக எழுதி வைத்தாள்.
எழுதியதை,எடுத்தெடுத்துப் படித்துப் பார்த்தாள்ஏனோ; அவளே நாணமுற்றுப் பின்னர்எடுக்காமல் படுத்துப் பார்த்தாள் - தூக்கம்பிடிக்காமல் எழுந்தமர்ந்து; எழுதியதை மீண்டும்மார்பகத்தில் அணைத்துப் பார்த்தாள்!
“கடிக்காமல் இனிக்கின்ற கரும்பும் உண்டோ? - ஆனால்காணாமல் சுவைக்கின்ற காதல் உண்டே! அதற்குத்தேடாமல் கிடைக்கின்ற சான்றாக நானே இன்றுமூடாத விழிகளுடன் புரள்கின்றேன்” என்றுதன்னைத்தானே நொந்துகொண்டுதளிர்க்கொடியாள் தவித்தபோது;
“பொன்னைத் தான் தொலைத்துவிட்டவறியோன் போலத் துடிப்பது ஏன்?
உன்னைத்தான் கேட்கின்றேன் தோகையே” என்றுஉயிர்த்தோழி பொற்கொடி அருகில் வந்தாள்.
“துடிப்பது ஏனென்று புரியவில்லையா? நான்படிப்பதைச் கேள்!” என்று எழுதிய ஏடெடுத்தாள்.எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இருவிழியால் முத்தமிட்டுஇதயத்தின் எதிரொலியைத் தோழிக்கு விளக்கிச் சொன்னாள்:
★ “என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,ஆடு ஆடு என்ப ஒருசாரோரே;ஆடன்று என்ப ஒருசாரோரே;நல்ல, பல்லோர் இருநன் மொழியே;அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,யான் கண்டனன் அவன் ஆடாகுதலே”
(புறநானூறு : பாடல் : 85பாடியவர் : நற்கண்ணையார்பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)
“சுடுங்காதல் நெருப்பாலே சுவைப்பண்டம் சமைத்துகடுந்தமிழ்ச் சொல்லாலே இப்பாடல் இயற்றியுள்ளேன்.இனியவளே! என் தோழி பொற்கொடியே!இதன் கருத்தை எளிய நடையில் கூறுகின்றேன், கேள்!உளங்கவர்ந்த என்னுயிர்த் தலைவனுக்குஊரும் இதுவல்ல; நாடும் இதுவல்ல - அதனாலேஒரு சாரார் அவன் தோளில் வெற்றிக்கிளி தொத்துமென்றும்,மறுசாரார் மல்லனுக்கே வெற்றி - இந்த மறவனுக்குஇல்லையென்றும்,
இரு கருத்தை உதிர்த்தார் எனினும்இருவருமே இவனைத்தான் நினைத்திருந்தார்என்பதிலே என் மனதுக்கோர் மகிழ்ச்சி தோன்றிஅன்பனது வெற்றி உறுதி உறுதியென்றுசிலம்பொலிக்க ஓடிச்சென்று நான் - உளம்சிலிர்க்கப் போர் முடிவை எதிர்நோக்கி - என்மனையின்கண் வளர்ந்துயர்ந்தபனைமரத்தின் மறைவில் நின்றுநினைவனைத்தும் அவன்மீது பாயவிட்டு,எனைக்கவர்ந்தோன் இறுதியிலே வென்றுவிட்ட காட்சிகண்டேன்.”
இப்படிப்பாட்டும், பாட்டுக்குப் பொருளுமுரைத்துவாட்டும் காதல் நிறைவேற வழியொன்று சொல்லென்றுவரம் கேட்டுத் தோழியிடம் தவமிருந்த நற்கண்ணைக்கரம் பிடித்துத் தோழி சொன்னாள்:
“செந்தாமரை மலரே! நீ தேடும் செங்கதிரோன்;செக்கர்வானத்தில் நெடுந்தொலைவில் இருப்பதாகஎண்ணிடாதே!முந்தாநாள் முரட்டு மல்லனை வீழ்த்திய மழவன்முதுபுலவர் சாத்தந்தைப் பெருமானுடன் - இங்கிருந்துமூன்று வீடு தள்ளித்தான் இருக்கின்றான்.வந்தால் நீ என்னோடு; காட்டுகின்றேன்” என்றாள்.
“தடாகம் நோக்கி வானம் தானாக வந்துவிட்டால்தாமரைக்குச் சூரியன் கைக்கெட்டும் தொலைவுதான் -எனினும்,
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் பெண்ணியல்புஎச்சரிக்கை செய்து என் கையைத் தடுக்குதடி!வலுவில் சென்று நான்; அவன்வலையில் விழுந்த கதை ஊரறிவிட்டால்வாய்விட்டுச் சிரித்து அவன்வந்தவழிபோ என்று உரைப்பானேல்,காய்க்காமல் கனியாமல் என் காதற்பூ;காலை அரும்பி அப்போதே காய்ந்த மலர் ஆகாதோ?கதிரை, நிலவைக் கண்டதுண்டு என் கண்கள்கடலை, வானை, மலையை, முகிலை,மயிலை, புறாவை, கிளியை, குயிலை,சிங்கம், புலியை, சிறுத்தையை, மானை,இயற்கையின் எழிலை, இன்பப் பொழிலை,செயற்கைச் சிலையை, சிற்பநுண்கலையைகண்டன எனினும் என் கண்கள்கணத்தில் மீண்டு முகத்தில் அமைந்தன!இன்றென் நிலைமை என்ன தெரியுமா? - அந்தஇனியனைக் கண்ட கண்கள் இன்னும்என்னிடம் வந்து சேரவே இல்லை!உன்னிடம் சொன்னேன் இந்த உண்மையினை”
என்றுரைத்த,நற்கண்ணைக்கு வந்துள்ள நோயை எந்தநாட்டு மருத்துவம் போக்க முடியாதென்றுபொற்கொடியாம் அவள் தோழி - இச்செய்தியினைப்போட்டுடைக்க நினைத்தாள் பெருங்கோழிநாய்கனிடம்!
அப்போது,“மகளே; நற்கண்ணை!” என்றழைத்தவாறு
மாநாய்கன் மனை புகுந்தான்!“மகிழ்வு தரும் தகவல் ஒன்று கேளம்மா!மல்லனை வென்றிட்ட பெருநற்கிள்ளியினை,நாளை பகல் விருந்துக்கு வருகவென்றுநம் வீட்டுக்கு அழைத்துள்ளேன்!சாத்தந்தைப் புலவரது சம்மதம் பெற்று, அவனும்சரியென்று ஒப்புக் கொண்டான்” என்றுரைத்தார்.
மணிமலர்ப்பாத சின்னவிரல் சிலிர்க்கத் தொடங்கிமாங்கனிகள் இரண்டும் மென்மேலும் புடைத்தெழுந்துமங்கையல்லாள் மேனியெலாம் புல்லரித்துமருதாணிச் சிவப்பாகக் கன்னங்கள் மாறித் தோன்றமான்குட்டி தோற்கின்ற துள்ளலுடன் நற்கண்ணை;மயக்கம் வராமலே தோழியின் மடியில் சாய்ந்தாள்!
பொருள் விளக்கம்:என்னைக்கு = என் தலைவருக்குஅன்மையானும் = இல்லாவிடினும். ஆடு = வெற்றி.போந்தை = பனைமரம். குடமலை = மேற்குமலை.குணகடல் = கீழ்த்திசைக்கடல்.
♦ ♦ ♦

மூலமும் சான்றும்