கவிதை 2 / 3

பறம்புமலைப் பாரி வள்ளல் விழாக் / கவியரங்கில் / முதல்வர் கலைஞரின் தலைமைக் கவிதை

At the Parambu Hill Festival for the Great Patron Pari / At the Poetry Gathering / Chief Minister Kalaignar's Presiding Poem

X
5—5—71
பறம்பு மலையில் 5—5—71 அன்று நடந்த பாரி வள்ளல்விழாவை யொட்டிய கவியரங்கில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிஅவர்கள் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிப் பாடிய தலைமைக்கவிதை.
மாதவர்க்கு ஒரு பாகம்—மாது, அவர்க்கு ஒரு பாகம்—[மாதொரு பாகன்—சிவனார்!]மாதவர்க்கு ஒரு பாகம்இந்த விழாவில் குன்றக்குடிமடத்தின் தலைவர் அடைகின்ற மகிழ்ச்சியிலேமாதவர்க்கும் ஒரு பாகம் உண்டன்றோ?ஏனெனில், இது முடித்து எனஇழுத்துச் செல்ல இருக்கின்றார் சிவகங்கை..........
அந்த மாதவர்க்கு வணக்கம்........இங்குள்ள அன்பிலார்க்கு வணக்கம்........என் பால் அன்பிலார் இருப்பின்அவர்க்கும் வணக்கம்—பெரியமருதநேயார் மதுரை முத்து மேயர்க்கும்சின்ன மருதாம் தென்னரசுத் தோழர்க்கும்வணக்கம்—
தமிழ்த்துறவி என்கின்றோர் நம்மை—நான் ஏற்பதில்லை—எதைத் துறந்திடினும்
தமிழை மட்டும் துறந்திடேன் எனச் சொல்லும்—நீவிர்தமிழ்த் துறவி அல்ல!தவத்திரு அடிகளாரே! ஏற்றிடுக என் வணக்கம்—இன்று மதியம்:மதுரையில் தான் தூங்காமல் இக்கவியரங்கப்பாடல்தனைத் தீட்டி வந்தேன்........
அங்கு,மதுரையில் இருந்த சங்கம்—இங்கு எழுந்து வந்ததுபோல்இருக்கின்ற புலவர் குழுவே!அனைவர்க்கும் வணக்கம் சொல்வேன்—எனக்கிருக்கும் எத்தனையோ வேலைக்கிடை இதுதான்கவிதை
எனக் கிறுக்கும் ஏனோ அழைத்து என்பால்தனக் கிறுக்கும் பேரன்பை வெளிப்படுத்த—பெருந்தவக் கிறுக்கர் அடிகளார் அழைத்திட்டார்கன்றுக்குடி இல்லாமல் பால் கறக்கும் வித்தை கற்றசென்னை விட்டுகுன்றக்குடி ஆதீனக் கொடி பறக்கும் பறம்பு மலை வந்துவிட்டேன்
மலைக்கிருக்கும் அழகெல்லாம் மாரியாலே—இந்தமலைக்கிருக்கும் அழகெனிலோ மன்னன் பாரியாலே இங்கு—பலாச்சுனைக்கிருக்கும் சுவை கூட அவனளித்த கொடைஎன்பேன்.
அவனரசில் எலியின்வளைக்கிருக்கும் பாதுகாப்பாய் பூனை யென்பார்—வயலின்களைக்கிருக்கும் மதிப்புக்கூடத் தன் பொருளின்பால்வைக்கா வள்ளல்—கொடிக்கிருக்க விட்டாக இழையணித்தேர் ஈந்த அண்ணல்
கதைகளிலே படித்திருப்போம் கலகம் செய்—நாரதரும்கந்தவேலன் முன் சென்று ..உன் காதலுக்கேற்ற நங்கைவள்ளி என்பேன் வடிவழகி, வட்டநிலா!அள்ளி உண்பாய்ப் பார்த்து விட்டால் என்று கூறமுருகனுமே
துள்ளி யோடித் தோகையினைக் கண்டிடவேபுள்ளி மயில் மீதேறிப் புறப்பட்டு அவ்வையாரின் கற்பனைகேளீர்!ஈங்கோர் கற்பனை கேளீர்
நெடுந்தொலைவு பயணம் செய்தும் நேரிழையைக்காணாமல்
பறம்பு மலைக் கருகே வந்து பல் இழந்த பாட்டி ஒருத்தியிடம்—மீசை
அரும்பு கட்டா முருகனுமே வள்ளி எங்கே எனக்—கேட்கபாட்டியோ, மலை மீது ஏறிடுக! கண்டிடலாம்! என்றவோர் பதில்
நீட்டி முழக்கி நடந்திட்டாள்—நெடுநல் வேல்முருகன்,ஏறிந்து,ஈட்டியின் வேகமென ஏறினன் மலையின் மீதுவள்ளி எங்கே? வள்ளி எங்கே? என அலைந்தவடிவேலனிடம்......வந்திடுக......கண்டிடுக....எனக்காட்டினர் அங்குள்ளோர், மலையெல்லாம் வள்ளிக்கிழங்கு!கிழங்குகளின் குறும்பு என்னே......உண்ணும்கிழங்கினை வள்ளியென்றே உரைத்து நமை ஏய்த்தாரேபாட்டி யென்று—முருகன் ஏமாந்து பறந்து விட்டான்,
ஏமாற்றமில்லாமல் திரும்பலாம் பாரி பெற்றபூநாற்றம் கமழ்கின்ற பறம்பு மலைப் பாரி கண்டால்—என்பபாரேற்றும் பெயர் பூண்டான்—தமிழுக்குச்
சீரேற்றும் கபிலனது உறவுங் கொண்டான்புவி வேந்தன் பாரிக்குத் தமிழ்க்கவி வேந்தன் கபிலன் தான் உயிர்த் தோழன்மதி யிரண்டாய்ப் பிரிந்து வந்து மகளிர் எனப் பிறந்ததுபோல்—பாரி வள்ளல்
அதியழகுச் சிலையிரண்டைப் பெண்களாகப் பெற்றெடுத்தான்
பதியாவோம் அவர்க்கென்று பெண் கேட்டு பலமன்னர், கிடைக்காமல்
படை கொண்டு பறம்புமலை தாக்கித் தோற்றார்—தேன்அடை உடைத்துக் கிளம்பிவிட்ட ஈக்களன்ன மூவேந்தர்,பறம்பு மலைத்தடை தகர்த்துப் பாரி உயிர் குடித்து விட்டார்
நாடிவந்து கேட்டபோது பெண் இல்லை யென்று போர்நடத்தி, பின்னர்;தேடி நொந்து திசை நாலும் மன்னர்களைக் கேட்டலுத்துஇறுதியிலே,காரி மன்னன் செல்வர்க்குபாரி மக்கள் துணைவியரானர்கபிலரது முயற்சியினில்!நாடாண்ட தன் தோழன்—தமிழ்நாயகரும் பாரிக்குத் தான் செய்யும் தனிக்கடமைமுற்றிற்றென்று!ஏடாண்ட பெருங்கவிஞன் கபில மேலோன்எந்தன் பாரியுடன் இனிச்சேரத் தடையில்லை, எனக்கருதிவடக்கிருந்து உயிர்நீத்தான்சாகின்றோர் நண்பன் எனில் அவன் தலையில் அவசரமாய்க்கல் ஒன்றைப் போடுகின்ற ஆருயிர்த்தோழருண்டு இந்நாளில்! எதிரியிடம்
தோற்றிடுவான் தோழன் எனில் துரோகம் செய்துஎட்டப்பர் ஆகின்ற “நல்லோர்” உண்டு நம்நாட்டில்—அந்த
நன்றி கெட்டோர்க்கும் நல்லறிவு புகட்டுகின்றபாடமன்றோ
கபிலர்—பாரி கனிந்த நட்பு!
உண்டிக்கொடை, பொற்கொடை, ஊர்திக்கொடை எனஒன்பான் கொடை வழங்கும் தமிழ் மரபில் முன்னூறுஊர்க்கொடையைப் பாரோர்க்கு அளித்த—பாரி புகழ்உலவு தென்றல் காற்றுக வீசுகின்ற மாண்பு கண்டேன்.
வள்ளல்களே வாயார வாழ்த்திவிட்டால் போதாதுவாழ்த்துபவர்
உள்ளங்களும் வண்மையுடன் திகழ்தல் வேண்டும்.குவித்து வைத்த பொற்குவியல் இருந்தால் தான்—கரங்குவித்து வரும் எளியோர்க்கு வழங்கிடலாம்—எனக்கூறல்சாக்குப்போக்கு
அவித்து வைத்த கிழங்கிரண்டில்—பசியால்தவித்துழலும் ஏழைக்கு ஒன்றில் பெருங்கொடையாம்,மனிதர்,
இரந்துண்ணல் தகாதென்று இங்கிருக்கும் தமிழரசுசிறந்திடுக பிச்சைக்காரர்! செய்தொழில் கற்றுத்தேர்ந்திடுக!
என—விடுதி பலத்திறந்திடவே திட்டமிட்டுப் பணி புரிதல் ஊக்குவிக்கஉமது மனம் அன்பால்
சுரந்திடவே வேண்டுகின்றேன்முல்லைக்குத் தேர் ஈந்து பாரியானீர்— ஒரு ஏழைப்பிள்ளைக்கு மோர் ஈந்து அவனில் நீர் பாதியானீர்!
பாரி விழா சிறப்பதற்குப் பாவலர் தம் கவியரங்கில்,வாரியே வழங்கிடுவீர் வண்ணத் தமிழ்ப் பெருமையெல்லாம்—
அன்னைத் தமிழின்தொன்மைஎளிமைவண்மைவலிமைஇறைமைபுதுமை—எனஎத்தனையோ ‘மை’ களையே பாடிடலாம்இத்தரையை முத்தமிட்டார் தேர்தலிலே பலபேர்!
அவரெல்லாம்—பாடுகின்றார், மை—மை—என்றே!ரஷ்ய மை—ரசாயன மை—மக்கள் தீர்ப்பை மதியா ‘மை’ யாலே வெற்றிஉண்‘மை’யை மறுப்பவர்க்கு—இம்மையிலும்—மறுமையிலும்—இம் ‘மை’ யிலும், மறு ‘மை’ யிலும்என்றுமே தோல்விதான்......
அன்னைத் தமிழின் “தொன்மை” என்றுதென்னை நல்கிடும் இளநீர் போல்......!இங்கோர் கவிஞர் தருகின்றார்......இளஞ்சேரக் கவிஞர் அவர் பேர் என்பேன்......
தமிழின் ‘எளிமை’ எனும் தலைப்பினிலேகண்ணொளிசேர் பாட்டொன்று—கேட்டிடுக இப்போது...அமிழ்தாம் கவிகள் இயற்றுகின்றஅருமை நண்பர் சவர்லால் பொழிவார் இங்கே கவிதைமழை!
‘வண்மை’ என்னும் தலைப்பினிலே எண்ணக் கவியொருவர் பாடிடுவார்—உண்மையொன்று சொல்கின்றேன்—அவர் இரு பெயரில் ஒரு புலவர், முத்து சம்பந்தம்—
அன்னைத் தமிழின் ‘வலிமை’ எனும் தலைப்பினிலே கவிஞர்அய்யாக்கண்ணு பாடிடுவார்!
அடுத்து—இறைமை!பாடுபவர்—சிங்கார வடிவேலன்!சிக்கலிலே வாழும் சிங்கார வேலா—எனப்பாட்டுகேட்டிருப்பீர்—தமிழில் இறைமைஎனும்தலைப்புச்சிக்கலிலே—இவர் சிறப்புக் கண்டிடுவோம்
அடுத்து ‘புதுமை’கொடியரசன் பாரிவள்ளல்...கோட்டைக்கொடியரசன்—முல்லைக்கொடியரசன்—அவன்முடியரசன்குடியரசு தழைக்கின்ற இக்காலம் இங்கோர்முடியரசன் இருக்கின்றார்......இவர் கவி முடியரசர்.......விரைவில்முடியரசு!
பின்னுரைமுன்னுரையில் நான் சொன்ன கருத்தெல்லாம்—மீண்டும்முடிவுரையில் சொன்னதாய் கொண்டிடுக!தமிழின் ‘தொன்மை’ தனைத் தரணிக்கு உணர்த்திடுவோம்—
‘எளிமை’ தனைப் பயன்படுத்தி எல்லார்க்கும் தமிழ் அறிவுஊட்டிடுவோம்—வண முறையற்ற வன்மையினில்தமிழ் வளம் விழாது காத்திடுவோம்இன்பத் தமிழ் எங்கள் பகைவர்க்கு‘வேல்’ என்று முழக்கிடுவோம்......வலிமை காட்டிடுவோம்!இறைமை தனைத் தமிழின் பால் காண்பதிலும்ஏழைத் தமிழர் சிரிப்பினிலே காண்பதுவே சிறப்பென்போம்—பயிற்று மொழித் தமிழாகப்பரவி விட்டால்;பால் நிலவுப் பயணத்தைத்தமிழ் மொழியில் கற்று நாமும்பல ‘புதுமை’கள் செய்திடுவோம்!
வணக்கம்.

மூலமும் சான்றும்