கவிதை 1 / 3
புரட்சிக் கவிஞர் பாட்டரங்கில் / முதல்வர் கலைஞர் தலைமைக் கவிதை
At the Revolutionary Poet's Poetry Gathering / Chief Minister Kalaignar's Presiding Poem
29-4-71 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின்80-வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்றகவியரங்கு
இடம்:— புதுவை
இன்று காலை: புறப்பட்டுக் கார் ஏறும் போதுபுதுவைக்குச் செல்கின்றாயா; அங்கு“குடி”யுண்டே—
எனக் கேட்டார் என் நண்பர்இங்குந்தான் தமிழ் நாட்டில் எத்தனையோ குடியுண்டு—இஃதறியா மனிதரா நீர் என்றேன்.அவரோ;வியப்பாலே விழி விரித்துவேகமாய் ஏன் விழித்துஎன்ன குடி? என்ன குடி?என்றார்காரைக்குடி—கண்ணங்குடி—குன்றக்குடி—குமாரக்குடிமாங்குடி—மணக்குடி—லால்குடி—ஆய்குடி—பொதக்குடி—சுரக்குடி—எனக்குப்புகழ் தந்த கல்லக்குடி—போதுமா குடியென்றேன்......கல்லக்குடி சரிதானப்பா—தமிழ்நாட்டில்
கள்ளக்குடி தடுத்ததற்குக் கடை திறப்புஎப்போதென்றார்......?
புதுவைக்குப் போகின்றேன்—பருக்கிடம்புள்ளி விவரம் கேட்டறிந்து—சிந்தித்துச் செயல் படலாம்—பறக்காதே இப்போது!சென்று வருகின்றேன் என விடைதந்து......
காரேறிக் கடுகி வந்து—வழியில்“சாரம்” விடுதியிலே இதனை எழுதி வந்தேன்—கணம் ஒன்று தாமதித்தால்......காருக்குள் நண்பனுமே ஓடிக் கொள்வான்—எழுத விடுவானு .....எடு! வை! எங்கேபுதுவை? என உயிர் எடுக்க மாட்டானு?....
புதுச் சிறப்பு—தனிச் சிறப்பு—பெருங்குடிச் சிறப்பு—பெற்ற நல்லூர்கவிச் சிறப்பு கொண்ட வல்லோர்புவிச் சிறப்பு கொள்ளும் வண்ணம் வாழ்ந்த பேரூர்.
ஆன் ஒருநாள் ஆயிரத்து தொளாயிரத்துநாற்பத்தாறில்அடி உதைகள் குத் தென்று அடியேனும் வாங்கிக்கொண்டுஆவி போகும் வேளையிலேஅரவணைத்த புனித பூமி—இந்தப் புதுவை பூமி—இன்றென்னை “முதலமைச்சே வருக” என்றுஎம் தலைமை; கழகத்தின் சார்பாக அழைப்பதற்குஇங்குமோர் முதலமைச்சர் இருக்கின்றார்தென்றல் வீசும் போதெனக்குப் பழையபுயல் நினைப்பு வருதல் இயற்கையன்றோ!பழைய பெருமாள்—பாட்டெழுதும் புதுவைச் சிவனுரைபண்புநிறை அமைச்சர் பெருமக்கள் தனை—
பாராட்டி வாழ்த்தி எந்தன் கவியரங்கைத் தொடங்குகின்றேன்......
எங்கள் ராஜாராம்—உங்கள் ராமசாமி ராமச்சந்திரன்ஆறுமுகம் ராமசாமி சுப்பையா அத்தனையும்ஆண்டவன் பெயர் என்பதாலே அவர்அருள் கேட்க வணங்குதலும் தவறல்ல!சண்முகமும்அவ்வாறே; ஒளவைச்சண்முகமோ பெயராலேஅரசர்களின் போரில் எல்லாம் அமைதித்தனைஉருவாக்கி விட்டதுபோல்;புதுவைச் சண்முகமும், புகையடக்கிப் புகழ் பெருக்கவாழ்த்துகின்றேன்.
முகத்தினிலே பெருமை—நல்அகத்தினிலே தமிழ் ஆசை—நாடெங்கும்முழங்குகின்ற சிலம்போசை—கொட்டுகின்ற போர்முரசாம் ம. பொ. சி. பெரியவரை வணங்குகின்றேன்.
புதுவைக் குயில் தனையே போற்றி என்கவிதை வரிகளையேஅவர் கல்லறையின்திருமுன்னேவைக்கின்றேன்.
கண்ணை இமை காப்பது போல்என்னை என்றும் காப்பதற்குஇருக்கின்ற தோழர்களே!எண்ணெய் யென ரத்தத்தைப் பெய்து தந்துதண்ணிலவாம் தமிழன்னை காக்கின்ற தீரர்களே!வெட்டி வா என்றுரைத்தால்கட்டி வரும் வீரர்களே!
பெட்டிக்குள் இருக்கின்ற பணத்தைஏழை எடுத்தெடுத்துப் பார்த்து மகிழ்வது போல்—என் அழைத்தழைத்து மகிழ்கின்ற நண்பர்களே!அலை பாடுங் கடல் மல்லை இங்குண்டு தமிழ்நாட்டில்......கல் பாடுங் காவியங்கள் கவின் பாடும் சிற்பங்கள்!நஞ்சையுண்டு... தஞ்சையிலே ....அங்குநஞ்சையுண்ட சிவனுக்குக் கோயில் உண்டு .....மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்றுயானை கட்டிப் போரடித்த மதுரை யுண்டு......அங்கு,மீன் ஆட்சி நடத்தியதால் மீன் பொறித்த கொடியுண்டுமீனாட்சி அம்மைக்கும் வான் முட்டும் கோவிலுண்டு—நெல்லையுண்டு சேலம் உண்டு .....குற்றாலம் கோவையுண்டு .....புதுவையென்று கேட்டவுடன் புதுப்போதைகொள்வோரும்மிகவும் உண்டு—
பைந்தமிழால் சுவை கூட்டும்—பாண்டி வாழ்ப் பெரியோரேமன்றேறி மணிக் கவிதை முழக்க வந்த கவிஞர்களே!என் வணக்கம் ஏற்றிடுவீர்;“ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் மென்றுஆடுவோமே!”அடைவதற்குள் அறுதியிட்டுச் சொன்னவனும்அடலேறு மொழி பகரும் மன்னவனும்அவனுக்குச் சின்னவனும்......இளம் மருது போன்றவனும்,.....எடுத்தவுடன்;
“எங்கெங்குக் காணினும் சக்தியடா—தம்பிஏழு கடல் அவள் வண்ணமடா”—என்றுபாரதி—பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன் ...“கனக சுப்பு ரத்தினம்” மென்று காத தூரம் இருந்தபேரைகவி பாரதிக்குத் தாசனென்றுகச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்......களம் சென்று தமிழ் காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்கொண்டான்......
நிமிர்ந்த போக்குநெறித்த புருவம்நீர்வீழ்ச்சி ஓசை—நெற்கதிர்க்கட்டு மீசைபாட்டெழுதும் வித்தையிலேபாரதி—ரசவாதம் கற்றவனும்—இவனைப்பார்! அதிரசவாதம் கற்றவனும்......அதிரசவாதம் கற்றவனும்......அத்துணை இனிப்பு இவன் பாட்டில்......சஞ்சீவி பார்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச் சென்றுசங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்காதலி: “நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்என்றாள்”
காதலன்: “ஆசையால் ஓர் முத்தம் அச்சாரம்போட்டென்றான்!”
“சிற்றாறும் வரப்பெடுத்த வயலும் ஆறுதேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்திநெற் சேறு உழுதுழுது பயன் விளைக்கும்நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?....விணுக்குறியா?வெடிக்கும் எரிமலையா?
புரட்சிக் கவிஞனைப்புவியொப்பி மாலை போடபோதாதோ இவ்வரிகள்?....“ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால்அத் தேசம் ஒழிதல் நன்றும்”முழுமனிதன் பாட்டன்றே இப்பாட்டு; இது கேட்டுஅழும் மனிதன் அரை மனிதன்......குறை மனிதன்......அரை குறை மனிதன்......“இருட்டறையில் உள்ளதடா உலகம்சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே”எனத் தொடங்கி“சுருட்டுகின்றோர் சில பேர்கள் தம் கையில் கிடைத்தவற்றை”என முடிக்கும்
இவனோர்சுருட்டுக் கவிஞன்—புகைச்சுருட்டுக் கவிஞன்—இவன்புரட்டுக் கவிஞவான்;மூடப் பழக்க மெல்லாம் தலை கீழ்ப்புரட்டுக் கவிஞவான்......அமளி துமளி ஆர்ப்பாட்டம் அணி வகுப்புஅதற்குத்தான் கவி வருமா?அமைதியிலே உலகு வாழ புதுவைக் குயில் கூவாதா?(கூவியதைக் கூறுகின்றேன்)“புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”அமைதிக் கவிஞனை அழைக்கின்றான் உலகத்தை......சாந்தியால் உலகம் தழைப்பது நன்று?சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்று?
காந்தியார் கதறிய கருத்தினைக் கவிஞன்கனவிடை மெழுகென உருகியே கேட்டான் .....“பொய்யுரைப்போன் பயங்காளி—பிறர்பூமி சுரண்டிடுவோன் பெருச்சாளிவையக மக்கள் எல்லோரும்—நலம்வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி!”கருத்துக் கவிஞன்; சற்றுக் கருத்த கவிஞன்காலக் கவிஞன்; முக்காலக் கவிஞன்—அவன்சுவையாய்த் தமிழுக்கு அருவியின் பாடல்;அமைவாய்க் கண்ட அற்புதம் என்னே!“விருந்து வரக்கண்ட மெல்லி முகம்போல் முல்லையரும்பு மலர்ந்த தென்ன வேடிக்கை......தெரிந்தவரை கண்டாலும் தெரியாதாரைக் கண்டாலும்சிரிப்பது தான் இதன் வாடிக்கை......”இன்றென்று கேளீர்; விழிக்குஇனியவள் ஒருத்தி ஆடுகின்றுள்......மொழிக்குச்சுவையேற்றி தாசன் பாடுகின்றார்.....“சதங்கை கொஞ்சும் பாதம் சதி மிதிக்கும் வானில்மிதக்கும் அவள் தாமரைக்கை! மேலும்—வதங்களிலாச்சண்பகத்து நல்லரும்பு சாடை புரிகின்ற விரல்கண்டவரும் செம்பவளக் காம்பு!”மற்றொன்று:“தொண்டையிலே ஒன்றுமே அடைக்கவில்லேதுணைவனவன் சிறுகிணப்புக் கணக்க லுற்றுள்அண்டையிலே மங்கை போய் ‘அத்தான்’ என்றுள்”அவருக்கே உரிய கேலி!அவர் கவிதைக்கே உரிய சுவை!உவமைக் கோர் கவிஞன் என்றுஉரைக்கின்றார் பெருங்கவிஞர்......
ஒன்றிரண்டா எடுத்துச் சொல்ல......1. “தொட்டி நீர்தனில் சுண்ணாம்பு கலந்த கலப்பன்னைஇருள்தன்கட்டுக் குலைந்தது”
2. “சோற்றை அள்ளுங்கால் துவள் வாழைத் தண்டில்உறும்சாற்றைப் போலே வடியத் தக்க வண்ணம் உற்றுநெய்யை!”
புரட்சியா அமைதியா?பொங்கும் உவமையா? கருத்தா? தமிழ்ப்போதை தரும் சுவைத் தேனா?......எதின எது மிஞ்சுமென்றுஎவர் கூறி வாதிட்டாலும் .....ஒப்ப மாட்டேன்; ஒன்றை யொன்றுமிஞ்ச மென்பேன்!எடுத்தனை அவர் தந்தார்!இருண்ட வீட்டில்குடும்ப விளக்கேற்றி வைத்தார்இசையமுது பொழிந்து, அதற்குப்பாண்டியன் பரிசு பெற்றார்... நமக்குக்குறிஞ்சித் திட்டுமுண்டு குயில் இதழ் நடத்தும்போது;கவிதை;அழகின் சிரிப்பிலே தமிழியக்கம் கவர்ந்து விட்டார்......அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார்......அவர்காதல் நினைவிலே கவிப் பெண்ணை வாடவிட்டு; சாவின்எதிர்பாரா முத்தத்தால் பிரித்து விட்டார்......என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்துவிட்டார்......இருகவியும் இறப்புலகில் சந்தித்து என்ன பேசியிருப்பாரெனஎண்ணுகிறீர்?....
நாம் தமிழ் நாட்டில் இன்றைக்கு இல்லையென்றுநம்மக்கள் பேசுகின்றார்......நம்புவதோ இதனை நாமும் .....செந்தமிழ் நாடென்னும் போதினிலே—இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேசிந்தை கவர் இந்தப் பாட்டினையே செயல் படுத்த மிக்கமனம்நொந்து நான் காத்திருந்தேன்—இன்றுவிந்தை கண்டேனோ தம்பீ!..... நம்தந்தையர் நாட்டுக்குத் தமிழ் நாட்டைப் பெயர்தந்தவர் அண்ணா! நாம் வாழ்கின்றோம் அங்கு!மெய்யலவோ என்றுபரவசத்தால் நடமாடும் பாரதிக்கு வணக்கம் சொல்லிப்பாவேந்தன் பகர்வான்“கனியிடை ஏறிய சுளையும்—முற்றல்கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும்—காய்ச்சுப்பாகிடை ஏறிய சுவையும்நனி பசு பொழியும் பாலும்—தென்னைநல்கிய குளிரிள நீரும்இனியன என்பேன் எனினும்—தமிழைஎன்னுயிர் என்பேன் கண்டீர்!” என்றெழுதி வந்தேன்...இன்றெல்லாத் தமிழர்களும் தமிழைத்தம்இன்னுயிராய்க் கொண்டு......சென்றங்கு எட்டுத்திசை பரப்புதற்கு முனைந்தார்...அய்ய! நாம் சாகவில்லை—வாழுகிறோம் தாயகத்தில்!உண்மைதான் நீர் உரைத்த தென்றேன்!பாரதியும் தன் தாசனையே தழுவிக் கொண்டுபாரதிரச் சிரிக்கின்றான்இருவருமே பாடுகின்றார்
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு!”
இரண்டு நாமும் பாடுவோம்......ஏற்றமிகு தமிழகத்தைக் கண்டிடுவோம்......நாற்றமிகு சாதிப்பூசல் களைந்திடுவோம்.....ஆற்றல் மிகு பாரதிக்கும் அவர் தாசர்க்கும் விழாஎடுப்போம்விழா எடுக்கும் வேளையிலே...... அவர்தம்விழாக் கருத்தைச் செவிமடுப்போம்கண்கள் விற்றுச் சித்திரம் வாங்குவதோஎனக் கேட்ட பாரதிக்குத் தாசன்;பெண்கள் கொய்யாப் பழக் கூட்டமென்றுரைத்தான்“தனித்துக் கிடந்திடும் லாயம்—அதில்தள்ளியடைக்கப்படும் குதிரைக்கும்கண்டிட உத்திரவுண்டு—வீட்டில்காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டுமோ?......எனக் கேட்டான்......காதல் அடைதல் உயிர் இயற்கை—அதுகட்டில் அடங்கும் தன்மையதோ?—அடிகோதை தொடங்கடி! என்று சொன்னான்—இன்பம்கொள்ள! கொள்ள! கொள்ள! மாந்தோப்பில்” என்றுமகிழ்ந்தவன்காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்தக்கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்”எனச் சொன்னன்எப்போது தெரியுமோ?இப்போது தானே நாம்குடும்பக் கட்டுப்பாடென்று கூறிகுசேலரைப் போல் ஆகாதீர் எனப்
பிரச்சாரம் புரிகின்றோம்பேரரசின் சார்பில்!......பெருங்கவிஞன் பிள்ளைக் கட்டுப்பாடு தேவையெனமுப்பதாண்டு காலத்திற்கு முன்பாகமுன்னேற்றக் கருத்துரைத்தான் .....நாலைந்து பிள்ளைக்குத் தந்தையான ஒருவன்நடு நடுங்கித் திண்ணையிலே படுத்துக் கொண்டான்நங்கையவள்—அவன் மனைவி வருகிறாள்—இங்குகங்கையைப் போல் பிரவாகம் காட்டுகின்ற கவிஞன்நடை கேளுங்கள்,அருமனைவி என்னிடத்தில் மெதுவாக வந்தாள்அயர்ந்தீரோ என்றுரைத்தாள்; மலர்க்கரத்தால்தொட்டாள்“தெருவினிலே பனி என்றாள்; ஆ மென்று சொன்னேன்தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம் வார்த்தைபெண்ண தேவை!பத்து மாதம் செல்லப் பகற் போதில் ஓர் நாள்பட்ட கடன் காரர் வந்து படுத்துகின்ற நேரம்சித்தமெல்லாம் மூத்த பெண் சுர நோயை எண்ணித்திடுக்கிடுங்கால் ஒரு கிழவி என்னிடத்தில் வந்துமுத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்லமுகூர்த்தத்தில் உன் மனைவி பிள்ளை பெற்றாள் என்றாள்தொத்து நோய், ஏழ்மை, கடன்காரர் தொல்லைதொடர்ந்தடிக்கும் குறையிலே பிள்ளையோ பிள்ளை!”அந்தப்பாரதிதாசன்;“பெண்ணைப் பெருமை செய்தான்,மண்ணைப் போல் மிதிபடும் மானிடரைப் பார்த்துஉன்னை விற்காதே!” என்றான்
“எதிரிகள் கோடி இட்டழைத்தாலும்தொடேன்” எனஎக்காளக் குரல் கொடுத்தான்......காரிருள் அகத்தில் நல்லகதிரொளியாய் நின்றான்......தொண்டு செய்யாது கிடப்பவன்ஆமை என்றான்......தொகை தொகை யாய்க்கவிச் சரவிளக்கு ஏற்றி வைத்தான்......பாரதிக்கு வாரிசாய் பாரதிதாசனென......தீவர்க்கும் கவிஞர்க்கும் பிறதகைமைசால் மேதைக்கும்—தமிழ்ப்பின்இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்......இன்றுபார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையேபாரதி தாசன் வழித் தோன்றல்களைப் பார்க்கின்றோம்,கோர்க்கின்றார் சொல் முத்து......பல கவிஞர்(பல கவிஞர்)கோர்க்கின்றார் சொல் முத்துபல் இல்லாக் கவிஞர்களும்......(தேர்தல்)வாக்கென்றால் பாரதிக்கும் பாரதி தாசர்க்கும் வேறுநோக்கின்றி வழங்கிடுவார்......இரு கவியும்வருவாரோ ஆள்வதற்கு......நம் கவியரசை!இனியுமே வரவேண்டும் ஆள்வதற்கு......இப்போதே ஆள்கின்றார் நமதுள்ளம்......அவர் வாழ்க!அவர் புகழ் வாழ்க!