கவிதை 4 / 3
“முதல்வர் கலைஞரின் பதில் கவிதை”
“Chief Minister Kalaignar's Reply Poem”
செப்டம்பர் 17-ல் ஈரோட்டில் பெரியார் சிலை திறப்புவிழாவில் பாடியது.
“சாராய சகாப்த” மென்று ஓர் கவிதைசக்கரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்தாராளமாய்க் ‘கல்கி’ ஏட்டில் தீட்டியதால்யார் யாரோ சுதந்திராக்கள் மகிழுகின்றார்‘பார் பாராய்க்’ குடித்தவர்கள் பர்மிட் வாங்கிநேர் மாறாய்ப் பேசுகின்றார் புத்தர் போல்!இதயத்தில் நோய் என்றும்இரு யூனிட் வேண்டும் மென்றும்இதோ ‘டாக்டர் சர்டிபிகேட்’ பாரும் என்றும்இங்கிருக்கும் சுதந்திராக்கள் குடித்த கதை ஊரறியும்!பணக்காரர் பகல் வேஷக்காரர்க் கெல்லாம்மணக்கமது வாங்குதற்கு பர்மிட் வேண்டும்!பகட்டுக்கு ஒருநீதி—பாவம் ஏழைக்கு ஒருநீதிபஞ்சாக சாத்திரத்தின் புதுநீதி!வாடுகின்ற ஏழைக் குடிகாரன்வார்னிஷைக்குடித்து செத்த போதும்—தனம்மேவுகின்ற சீமான்கள்—போதைமோதுகின்ற ‘விஸ்கி’ ரம் அடித்த போதும்நெளரோஜி வீதியில் தான்நாற்றம் துளைக்கலையோ?நாடுதான் பார்க்கலையோ?‘ஆழ்ந்த அறிஞர் அண்ணா’ என்றுஅன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்அயர்ந்தேதான் போனேன் அய்யா!
அன்றொரு நாள்:
அண்ணா பற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோதுஅற்ப வயதில் செத்தவரெல்லாம்அவதாரப் புருடர் தாமோ—என எழுதிஅவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தா போகும்?ஒரிசாவில் இவர் கட்சி ஆட்சியிலேஒடிற்றே மதுவின் வெள்ளம்—அப்போதுதரிசாகப் போனது ஏன் இவரின்—உள்ளம்?வரம் பெற்ற கருணைச் செல்வர் என: ஏனவாழ்த்துகின்றார் வணங்குகின்றேன்!வரம் தந்தார்—இவரல்ல; நேசக்கரம் தந்தார் நாட்டு மக்கள்!வரம் பெற்றேன்—பெரியார் அண்ணா தந்த நெஞ்சுஉரம் பெற்றேன்!
இப்போதும் சொல்கின்றேன் கேட்டிடுக!இந்தியா முழுமைக்கும் அறவேமது விலக்குக் கொண்டுவர சட்டம் செய்தால்சிரம் தாழ்த்திக் கரம் குவித்துசிறப்பான செயல் என்று போற்றி நின்றுசெயலாக்க முந்திடுவேன் அதன் பிறகும்;இதயநோய் என்று—சிலர்இருட்டினிலே குடிப்பதையும்இனி அனுமதிப்பதில்லை யென்று விதிசெய்வேன்!முழு விபரம் தேவை யெனில்பட்டியல் பிறகு சொல்வேன்: