கவிதை 55 / 77
இன்றுமா கூச்சல்?
Still This Clamour?
இன்றுமா கூச்சல்?
காவிரியின் கரையினிலேபெண்ணையின் பாய்ச்சலிலேசரிதமில்லை! சரிதமில்லை!ஐயகோ தமிழ்நாடே;ஆரம்பம் கங்கையிலாம்! பாண்டியர்ஆண்டதை யார் கண்டார்?சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர்?சோழர் வளப்பம் சொன்னது முண்டோ?செருப்பாண்ட கதைதான்சரிதத் தொடக்கம்!மறுப்பவரெல்லாம் மானம் விற்றார்.மாற்றியமைத்திட மாணவர் வந்தார்!பளிச்செனப் பாய்வர் பாசறை வீரர்!இளித்த வாயரே இன்னுமா கூச்சல்?