கவிதை 58 / 58
பகைவாள் முனை மருங்க; நாள் எல்லாம் உழைப்போம்!
Beside the Enemy Sword's Edge; Let Us Labour All Our Days!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பகை வாள் முனை மருங்க; நாள் எல்லாம் உழைப்போம்
பகைவாள் முனை மருங்க;நாள் எல்லாம் உழைப்போம்!
ஒளி மிகு புகழுடன் ஒப்பற்றோர் ஆட்சிநடத்தியவன் முதலாம் குலோத்துங்கன் - எனும்
முத்திரையை வரலாற்றில் பெற்ற மன்னவனாகசீன நாட்டுடனும் நட்பு கொண்டு, நாடாண்டு
கி.பி. 1077இல் 72 பேர் கொண்ட தூதுக்குழுவைசீனப் பேரரசுக்கு அனுப்பிச் சிறப்புற்றவன் என்றும்,
மாமன்னர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தகரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன் எனும்
மூவேந்தர்களின் அறிவுக்கும் திறமைக்கும் வீரத்துக்கும்முற்றிலும் நிகராக ஆற்றல் நிறை ஆட்சியினை
நடத்தினான் என்பதை விட ஒரு படி மிஞ்சியும்நிர்வாகத் திறன் கொண்டவன் என்பதை
நிருபிக்குமளவுக்கு நில அளவை முறை,சுங்கம் தவிர்த்த ஆணை போன்ற மக்கள் நலத்
திட்டங்களில் ஆர்வமுடையனாகவும் விளங்கிதீராதி தீரனாகத் திகழ்ந்த குலோத்துங்கன் ;
சோழப் பேரரசை செழிக்கச் செய்த பின்சோடையாக ஓர் அரசு அமைந்தது -
இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மற்றும்மூன்றாம் இராசேந்திரன் என ஏழு பேர் சோழ மன்னர்ஆண்ட பின்னர் ;
எழுவரில் மூன்றாம் இராசராசனே ஆட்சியில் சோடையாகி ;சோழப் பேரரசு வீழ்வதற்குக் காரணமானான் என முடிகிறது அந்தவரலாறு!
இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியிலேயே 1132இல்பட்டத்துக்கு வந்த பாண்டிய மன்னன் மாறவர்ம சீவல்லபன்,
திருவரங்க ராயம் வளைத்து, பாண்டியப் பேரரசுக்கு, வித்திட்டான்.பாண்டியப் பேரரசின் முடிவும் பதினான்காம் நூற்றாண்டிலேயேவந்துற்றதாம்
மூன்றாம் இராசராசனே சோழர்களில் வலிமையற்றவன் என்பதைமுன்னரே குறிப்பு காட்டியிருப்பதால் ;
மாவீரனாம் மானவர்மன் சுந்தரபாண்டியன் 1219லேயேதாவினான் தஞ்சைப் பக்கம் படை கொண்டு - பாண்டியனின்
தாக்குதலால் பதறிப் போன மூன்றாம் இராசராசன் ;தீக்கு இரையாகக்கித் தஞ்சை உறையூரைத் தரைமட்டமாக்கி விட்டு,
தலைமறைவாக ஓடி ஒளிந்து கொண்டான் ; தப்பிய வரையில்போதுமென!தஞ்சை அபிடேக மண்டபத்தில் பாண்டியன் வெற்றி விழாநடத்திக் கொண்டான்!
பொன்னமராவதியெனத் தற்போது வழங்குகிற நன்னகரில்மன்னன் சுந்தரபாண்டியன் ஓய்வு கொண்டுள்ளான் எனும் செய்தி ;
செவியில் விழுந்ததும் சோழன் சீறிக் கிளம்பி எதிர்த்துப்போரிட்டான் என்றில்லாமல்,புவியாளும் பொறுப்பைப் பிச்சையாகத் தருக என இருகரம்கூப்பிக் கேட்க ;
பொன்னமராவதிக்குப் புயல் வேகத்தில் ஓடினான் -என்ன செய்தி ? எதற்கு வந்தீர் ? எனப் பாண்டியன் வினவ ;
பாராண்ட சோழன் குனிந்து பணிந்துகும்பிட்டு வீழ்ந்து சொன்னான்
பாண்டிய மன்னா ; பார் புகழும் தலைவா!வேண்டுதல் ஒன்றுண்டு விருப்பத்தை நிறைவேற்றிடுக -
ஈண்டு வந்துளானே என்னோடு என் மனைவி ;இருவரும் உம் தாள் வீழ்ந்து கேட்கிறோம் -
எம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி இரக்கம் காட்டிடுக -பிடித்த எம் நாட்டைக் கொடுத்தாலே போதுமானது!
பறித்த சோழர் நிலம் திரும்ப ஒப்படைப்பதே சிறப்பானது - மேலும்,இதில் இழிவொன்றும் எமக்கில்லை - உமக்கும் இருக்கத்தேவையில்லை.
தலை வணங்காத தமிழன் இராசராசனின் வழி வந்த ஒரு மன்னன்தலை குனிந்து வளைந்து வணங்குதல் கண்டு ;
“தமிழ்த் தாயே; அந்தோ சுயமரியாதை இழந்து விட்டசோழ மன்னனை மன்னித்து விடு” என்று சொல்லி
தனக்குத் தானே தன் நெஞ்சில்சுந்தர பாண்டியன் சூடொன்று வைத்துக் கொண்டான் ;
தன்மானம் பற்றியும், தமிழ்மானம் பற்றியும்அவன்தான் கவலைப்பட்டான்!
இந்த நிலையையே அடுத்தடுத்து தொடர்ந்து -அண்ணன் தம்பி சோதரர்களுக்குள்
மூவேந்தர் முட்டி மோதிக் கொண்டும் -பிற இனத்தார்க்கு இடம் கொடுத்து -
பின்னடைவைச் சேர்த்திட்டார் - தமிழ் இனத்துக்குஅதனாலே பேரரசுகளாக இருந்த மூவேந்தர் பூமிகள் ;
சிற்றரசுகளாகி - பின் சின்ன சின்ன அரசுகளாகிஇறுதியில்சிற்றெறும்பு அரசுகளாயின் -
எழுச்சியுற்றிருந்த தமிழக வரலாற்றைஎழுதி எழுதி மகிழ்ச்சியுற்ற எனக்கும்
படித்துப் படித்து உணர்ச்சி பெற்ற உங்களுக்கும்இனியும் இதனைத் தொடராமல் இருப்பதே நலம் -
நம்மை நாமே எண்ணிப் பார்த்துநமக்குள் ஒற்றுமையும் உறவும் வலுப்பெற
நாளெல்லாம் உழைப்போம் - பகைவர்வாளெல்லாம் முனை மழுங்க வெற்றி குவிப்போம்!
(முதல் பாகம் முற்றிற்று)