மூல அமைப்பு அலகு 5 / 7
Stair-fall and dream exit
இந்நூலின் மூலம் காட்சி எண்களையோ அங்கங்களையோ அச்சிடவில்லை. இப்பகுதி மூல அமைப்பை பிரதிபலிக்கும் தொகுப்பு அலகு (SRU) — வழிசெலுத்தலுக்கானது; மூலத்தின் காட்சி எண் அல்ல.
மூல ஸ்கேன் 39, 40
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
எப்பாடி! என்றவாறு தேசீயம் பிள்ளை படிக்கட்டுகளில் உருண்டார்.
உருளுகிறீர்! உருளுகிறீர்! பல படிக்கட்டுகளில் உருளுகிறீர்—உருண்டு கொண்டேயிருக்கிறீர்!—எமன், அவர் உருளுவதைப் பார்த்துக் கலகலவென சிரிக்கிறான்!
அவர் உருண்ட முதல் படி கோவைப் படி—அந்தப் படியிலேயே சரியான அடி!
சமாளித்து எழப்பார்த்தார்—அடுத்த படி ஆம்பூர் படி. அதில் மிகவும் பலத்த அடி!
குடந்தை படியிலும் மோசமான இடி!
ஒரு கயிற்றைப் பிடித்து நிமிர்ந்தார்! எழ முடியவில்லை. மீண்டும் உருளுகிறார்—உருண்டுகொண்டேயிருக்கிறார்!
உருண்டு கொண்டிருக்கும் தேசீயம் பிள்ளையின் மூக்கு சப்பையாகப் போகும் அளவுக்குப் பலமான இடி கொடுக்கிறது, மதுரைப்படி!
அம்மாவோ! வலி தாங்க முடியவில்லையே! என்று கதறுகிறார். வாயை மூடுவதற்குள் உடுமலைப் படியில் உருளுகிறீர். திறந்திருந்த வாயில் உதட்டுக்கு முன் நீட்டிக் கொண்டிருந்த இரண்டொரு பற்கள் கீழே விழுகின்றன.
பணப்பெட்டியொன்றில் கையை ஊன்றி ஆகா! தப்பினேன். கோபிப்படி—என்று பெருமூச்சு விடுகிறார். அடுத்தது பாசிப்படி! பெரிய வழுக்கல்! விழுந்தார்—விழுந்தார்—விருதுநகர் படியில்!
தலையிலிருந்து ரத்தம் குபுகுபுவெனக் கிளப்பிற்று......கால் முறிந்தது! உடம்பெல்லாம் ஊமைக் காயங்கள்!
திருச்சிப் படியில் உருண்டவாறு—அந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தார். நெஞ்சில் முட்டியது தஞ்சைப் படி!
பிரக்ஞை தவறிவிட்டது. கைகால்கள் செயலிழந்துவிட்டன. இருதயம் நின்றுவிடும் போல் தோன்றியது.
—மிக்க கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்க முயற்சி செய்தார். விழித்துப் பார்த்தார். பலகணி வழியாக ‘உதய சூரியன்’ ஒளிக் கரங்களே நீட்டினான். “கண்டதெல்லாம் கனவு” என முணுமுணுத்துக் கொண்டார். “கனவு பலித்துவிடுமோ?” என்று சந்தேகம் வேறு; சுற்றும் முற்றும் பார்த்தார்.