காட்சி 30 / 38
காட்சி-30
சிலம்போ சிலம்பு
பொற்கொல்லர் நிலையம்
மூல ஸ்கேன் 76
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[நூறு பொற் கொல்லர்களையும் நிறுத்தி வைத்துத் தலைமைப் பொற்கொல்லர் கேட்கிறார்]
பொற் : ம்...நீதி மன்றத்துக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள்...யார் சிலம்பை எடுத்தது?...
நூறு பேரும் : நாங்களில்லை! ..நாங்களில்லை!...
பொற் : பிறகு...சிலம்புக்குச் சிறகு முளைத்தா பறந்து விட்டது!...சரி...சரி...அந்தப் பகற் கொள்ளைக்காரன் யார் என்பதைப் பாண்டிய மன்னரே கண்டு பிடிக்கட்டும்...ம்...புறப்படுங்கள்...என்னோடு!...
[அனைவரும் பின்தொடரப் பொற்கொல்லர் புறப்படுகின்றார்]
[கோவலன் ஒரு வீட்டில் சிலம்பை விலை கூறுகிறான்]
வீட்டுக்காரர் : எவ்வளவு விலையானாலும் சரி எடுத்துக் கொள்கிறேன். இரட்டைச் சிலம்பாக இருந்தால் கொடு.
கோவலன் : ஐயா! இதிலுள்ள மாணிக்கப் பரல்களுக்காக இதைத் தனியாக வாங்கக் கூடியவர் யாரும்...
வீட்டு : அதற்கென்றுள் அரண்மனைப் பொற்கொல்லரைப் போய்ப் பாரும்...அவருக்கு ஒரு வேளை தேவைப்படலாம்.
கோவ : வணக்கம் அய்யா...
வீட்டு : யாரோ வாழ்ந்த வீட்டுப் பிள்ளை—
[கோவலன் வேறு இருவரிடம் சிலம்பை விற்க முயல்கிறான்]
ஒரு : அடேயப்பா; விலை மதிக்க முடியாத சிலம்பு! சரி, நீ இதை எடுத்துக் கொண்டு அரண்மனைப் பொற்கொல்லரிடம் போ...அவர் விற்றுத் தருவார்!...
இரண் : அடேடேடே...இதோ அவரே வருகிறாரே...பொற் கொல்லரே!
[பொற் கொல்லர் வருதல்]
பொற் : என்ன?...
ஒரு : பொற்கொல்லரே, இவரிடம் ஒரு அழகான சிலம்பு இருக்கிறது.
பொற் : சிலம்பு?
ஒரு : ஆமாம்...விலை மதிப்பில்லாத சிலம்பு; இதை விற்றுத் தர வேண்டுமாம்.
பொற் : தருகிறேனய்யா. எனப்பா, நீ எந்த ஊர்?
கோவ : பூம்புகார்.
பொற் : தேடி அலைந்தது தானுகவே கிடைத்து விட்டது! நீ இந்தச் சிலம்போடு இந்த மண்டபத்திலேயே இரு; நான் அரசருக்குத் தெரிவித்து விட்டு உன்னை வந்து அழைத்துப் போகிறேன்.
கோவ : மிகவும் நன்றி!
[வணங்கி உட்காருகிறான். பொற்கொல்லர் மற்றவர்களை அழைத்துச் சைகை செய்தவாறு]
பொற் : நீங்கள் இருவரும் இவருக்குத் துணையாக இங்கேயே இருங்கள். நான் வந்து விடுகிறேன்.
[பொற் கொல்லர் செல்கிறார்]