காட்சி 26 / 38
காட்சி-26
அரசியின் சிலம்பு
பொற்கொல்லன் வீடு
மூல ஸ்கேன் 69
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[அரசியின் உடைந்த சிலம்பை எடுத்துக் கொண்டு அதிகாரி தலைமைப் பொற்கொல்லரிடம் வருகிறான்.]
பொற் : வாருங்கள், வாருங்கள்! இப்படி உட்காருங்கள்! எங்கே இவ்வளவு...?
அதி : அரசி கோப்பெருந் தேவியின் சிலம்பு இது. இதை விரைவில் பழுது பார்த்து அனுப்பச் சொன்னார்....மன்னர்.
[சிலம்பைக் கொடுக்கிறான், பொற் கொல்லர் பெட்டியில் வைக்கிறார்.]
பொற் : அதற்கென்ன...நாளைக்கே கொண்டு வருகிறேன்.
[ஒரு பொற் கொல்லர் வேலை செய்வதைத் திருத்த, தலைமைப்பொற் கொல்லர் எழுந்து செல்லும்போது, அதிகாரி அந்தச் சிலம்பைத் திருடிவிடுகிறான்]
பொற் : ஏன் அவ்வளவு பலமாகத் தட்டுகிறாய்? எவ்வளவு நுட்பமான வேலை இது; மணி மோதிரம் என்றால் மல்லிகை கல் செதுக்குவது போலவா செதுக்குவது? இதை நீ செய்ய வேண்டாம்! அவரிடம் கொடு; அய்யா, இதைக் கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்.
பொற் : (அதிகாரியிடம்) பிறகு...
அதி : ஆகா, வந்த வேலை முடிந்துவிட்டது! நான் அரண்மனைக்குப் போகிறேன். நாளைக்குள் சிலம்பை...
பொற் : கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்.
அதி : நான் வருகிறேன்.