பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 24 / 38

காட்சி-24

கவுந்தியுடன் கண்ணகி கோவலன்

வழியில்

மூல ஸ்கேன் 66

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கவுந்தி, கண்ணகி, கோவலன் மூவரும் வயல் வெளியில் பசுமை நிறைந்த பயிர்களுக்கு இடையே நடந்து செல்கிறார்கள். மலர்த் தொடர்களும் காட்சியளிக்கின்றன—]

காலில் முள்ளுத்த ... கண்ணகி உட்கார்ந்து எடுக்கிறாள்.]

கோவ : கண்ணகி...உனக்கு நான் எவ்வளவு கொடுமை செய்துவிட்டேன். அய்யோ...இப்படி யெல்லாம் நடந்து உனக்குப் பழக்கமேயில்லையே!

[முள்ளைக் கோவலன் எடுத்துவிட்டு]

இந்த முள்ளைவிடக் கொடுமையானவன் நான்!...இதாவது உன் காலில் காயத்தை உண்டாக்கியது; இந்தப் பாவி உன் நெஞ்சத்திலே அல்லவா...ஆறாத காயத்தை ஏற்படுத்தி விட்டேன்?

இந்த முள்ளை விடக் கொடுமையானவன் நான்...

[குத்திக் கொள்ளப் போகிறான்]

கொடுமையானவன் நான்...என் கண்ணகி படும் கஷ்டத்தைப் பார்க்காமல்.. ஏ...முள்ளே! நீயே என் கண்களைக் குருடாக்கி விடு!

[தடுத்து...அலறி]

கண் : அத்தான்!...என்னத்தான் இது! உங்கள் அழகைப் பார்த்துப் பார்த்து என் துயரங்கள் மறக்கிறேனே, அது கூடப் பிடிக்கவில்லையா உங்களுக்கு! என்னை ஆருத் துயரத்தில் அமிழ்த்தி விட்டீர்கள்!

கவுந்தி : கோவல!

“இடுக்கண் வருங்கால் நகுக!” என்ற திருக்குறளின் மறந்தாயா? துன்பங்கள் வெற்றி காணுவதுதான் வீரனுக்கு அழகு—புறப்படு!....இதோ...மதுரைத் தென்றல் கூட வீச ஆரம்பித்து விட்டது.....

பாண்டியர் தலைநகர் இன்னும் சிறிது தொலைவுதான்...வாம்மா கண்ணகி—

[நடக்கிறார்கள்]

[நடைபாதையில்—வயல் மடையிலேயிருந்து ஒரு மீன் துள்ளி வரப்பில் விழுந்து துடிக்கிறது!]

கவுந்தி : ஆகா! ஆபத்தை உணராமல் உற்சாகத்தில் இப்படித்தான் குதிக்கிறார்கள்...சில மனிதர்கள்!

கோவ : என்னைப் போல!

கவுந்தி : எவ்வளவு அழகான மீன்! பாண்டிய நாட்டுக் கொடியின் சின்னமல்லவா மீன், அதனுல்தான் பயமில்லாமல் துள்ளுகிறது!

[என்றவாறு அதைத் தண்ணீரில் விடுகிறார்...தண்ணீரில் மீன் நீந்திச் செல்லுகிறது... அதிலிருந்து பாண்டியநாட்டு மீன் கொடி பறக்கும் காட்சி]