பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 19 / 38

காட்சி-19

கானல் வரியும் / காதல் பிரிவும்

புகார்

மூல ஸ்கேன் 55, 56, 57, 58

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கோவலனும் மாதவியும் புகார் பூம்புகார் தேரில் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்... விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும் புகார் நகரின் தெருக்களில் தேர் போகிறது. வெளி நாட்டார் வாணிப நிலையங்கள்... பண்டகசாலைகள்...விளக்குகளால் மின்னுகின்றன... கடற்கரையில், ஆடவர் பெண்டிர்... விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்... கோவலனும், மாதவியும் புன்னை மரத்தடிக்கு வருகிறார்கள்... அங்கே அழகிய வேலைப்பாடமைந்த திரை கட்டப்பட்டு அதன் மறைவில்... கடற்கரையையும், காவிரி கடலில் கலக்குமிடத்தையும் பார்த்தவாறு...அமைந்த எழில் மிக்க கட்டிலில் அமர்கிறார்கள். அமர்ந்ததும்... வசந்தமாலை...யாழை எடுத்துக் கொடுக்கிறாள்...மாதவியிடம்...]

மாதவி யாழைப்பெற்று...இசை கூட்டுகிறாள், தன் செங்காந்தள் விரல்களால்...சிறிது நேரம் பாட்டின்றி யாழொலியால் கோவலனை மயக்குகிறாள்...

கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் யாழ் ஒலியின் இனிமையில் மெய்மறந்து நின்று விடுகிறார்கள்...

கடல் அலைகூட அமைதி பெறுகிறது—குளத்தைப்போல், கடல் மெதுவாக அலைக்கரங்கள் அசைக்கிறது.

யாழ் ஒலி...கடற்கரையையே தன் வயப்படுத்திய பின்...மாதவி, யாழைக் கோவலன் கையில் தந்து...]

மாதவி : ம்...முதலில் நீங்கள் பாடுங்கள்!

[கோவலன், மாதவியின் விழிக்கண் எடுத்துக் குளிர்பார்வையை அவை மீது வீசி...அவைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டு...]

கோவலன் : இந்த விரல்களால் விழிகளைக் கூடக் குத்திக் கொள்ளலாம்...காயம் ஏற்படாது—அவ்வளவு மென்மையான அனிச்ச மலர் விரல்கள்!...

இந்த விரல்பட்ட யாழின் நரம்புகளத் தொடுவதற்கு...என்ன...முரட்டு விரல்களுக்குத் தகுதியுண்டா மாதவி?...

மாதவி : இந்த யாழுக்கு மாத்திரம் என்னப்போல உயிர் இருந்தால்...உங்கள் விரல் மேலே படும்போது ஏற்படும் சுகத்தை—ஒரு கவிதையாகவே பாடிவிடும்.

கோவலன் : அப்படியா? மாதவி...

மாதவி : அதுதான்...பாடுங்கள்...கண் பெற்ற இன்பம்...என் செவியும் பெறட்டும்...

[கோவலன் யாழ் மீட்டிப் பாடுகிறான்]

பாட்டு : “திங்கள் மாலை வெண்குடையான் சென்னிச் செங்கோலது வோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி! காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன், வாழி! காவேரி!

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோலது வோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி! காவேரி!

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்! மன்னு மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன், வாழி; காவேரி!

மாதவி : அதுதான், அழகான பாடல்...சுவையான இசை...ஆனால்...

கோவலன் : என்ன மாதவி?

மாதவி : பாட்டின் பொருளில்...

கோவலன் : பொருளில்...? சந்தேகமா...? காவேரி வாழ்த்துப் பாடினேன். காவேரிக்கு உரியவனை கரிகாற் சோழன்...கங்கையையும் வெற்றி கொண்டான்...அப்படி அவன் வடநாட்டில் படையெடுத்து கங்கையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டதைக் கண்டு...முதல் மனைவியான காவேரி அவனோடு கோபிக்கவில்லை...பிணங்கவில்லை...இது கற்புள்ள பெண்களின் இலக்கணம்...அப்படிப்பட்ட கற்புடைய காவேரி நதியே...நீ வாழ்க...என்பதே கருத்து!

மாதவி : ஓகோ...சரி...காவேரியிருக்கும் போது கங்கையைச் சேர்த்துக்கொண்டவன்...உங்கள் பாட்டின்படி அத்துடன் நிற்கவில்லை...

[இசையுடன் பாடிக்காட்டி]

“மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோலது வோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாய், வாழி; காவேரி!”

கோவலன் : ஆமாம்...பாடினேன்...காவிரியிருக்கக் கங்கையைக் கூடியவன் அதோடு நிற்காமல் பாண்டியரை வென்று...கன்னியாகுமரியையும் சேர்த்துக் கொண்டான். அதைக் கண்டு காவிரியும் வெறுப்படையாமல்...பிணங்காமல்...இருந்த கற்புக்கரசி காவேரியே...நீ...வாழ்க!

மாதவி : சரிதான்!...கணவன் கங்கையோடும் கூடுவான்...குமரியோடும் ஒருவன்...அதைக் காவேரி போலப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அதுதான்! இந்தப் பாடல் உங்கள் பாதுகாப்பிற்காகப் பாடினீர்களோ? கண்ணகியைவிட்டு மாதவி...பிறகு மாதவியை விட்டு...

[குறுக்கிட்டு]

கோவலன் : மாதவி!...தவறாகப் பொருள் கொள்ளாதே!...நான் பாடியது கரிகாலன் பெருமையையும்...காவேரியின் வளத்தையும் எடுத்துக் காட்டத்தான்!...

[யாழை வாங்கி]

மாதவி : இதோ...நான் பாடுகிறேன்...

[பாடுகிறாள்]

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக், கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்! வாழி! காவேரி!...

கோவலன் : இதோ?...காவேரி மங்கை வளங்குறையாமல் இருப்பதற்குக் காரணம் அவள் கணவன் சோழனுடைய செங்கோலின் சிறப்புதான்! கணவன் பண்போடு நடப்பதால்...காவேரி சிரித்து மகிழ்ந்து செழிப்புத் தருகிறாள். இதுதானே உன் பாட்டின் கருத்து?...அதாவது...காதலன் அன்போடு இருந்தால் காதலியும் அன்போடு இருப்பாள். எனக்கு உன்மீது அன்பு குறைந்தால்...உனக்கும் என்மீது அன்பு குறைந்து...பிறகு அந்த அன்பு வேறொருவரிடம்...

[குறுக்கிட்டு, கோபமாக]

மாத : அதுதான்!... நன்றியிருக்கிறது, நீங்கள் பாட்டுக்குப் பொருள் கூறும் அழகு!...

[யாழைக் கீழே வைத்துவிட்டு எழுந்து போகிறாள்]

கோவ : மாதவி!

[அழைத்தவாறு, பின்னால் போகிறான்]

[மாதவி வேகமாகப் போகிறாள்....“மாதவி, நில்” எனப்பின்னால் விரைகிறான் கோவலன்... அங்கே வலைகளுக்கிடையே ஒரு செம்படவப் பெண் நின்றுகொண்டிருக்கிறாள். அவளைக் கோவலன் பார்க்கிறான், செம்படவப்பெண் கோலத்தில், மாதவியே மீன் உருவமைப்பது போல் தெரிகிறது அவனுக்கு! அப்படி ஒரு கற்பனை அவன் உள்ளத்தில் எழுகிறது.]

கோவ : ஆகா! தேன் நிறைந்த நீலோற்பலப் பூவின் தண்டுகொக்க கையிலேந்திப் புலால் உண்ண வரும் பறவைகள் ஓட்டுகின்ற இந்தப் பாவையின் கண்களோ மிகக் கொடியன!

ஆகா! பொழில் தரும் நறுமலர்! பழுத்து திருமொழி! முழுமதி புரைமுகம்!

[மாதவி நின்று கவனிக்கிறாள். கோவலன் செம்படவப் பெண்ணை, மாதவி பெணக் கற்பனை செய்தவாறு]

கோவ : அடடா...நகை நட்டு எதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள்! பூகை பொத்த கொடிபோல நெளிந்தாடும் உருவத்தாள்! இடையோ ஒருபிடி.க்கும் காணை இளம்பிடி! இதற்கருகிலே தேன் ஒருபடி! இல்லை, இவளுக்கு குறைவையென்னும் புகழ்பெற்ற முல்லை!...பேச்சிலோ கிள்ளை! இவள் விடுமோ காதல் தொல்லை!

[பாடுகிறான்]

திரைவிரி தரு துறையே திருமணல் விரி இடமே... விரைவிரி நறுமலரே! மிடைதரு பொழிலிடமே— மருவிரி புரிகுழலே— மதிபுரை திருமுகமே! இரு கயல் இணைவிழியே என இடர் செய்தவையே!

[பாடிக்கொண்டு அருகே போகிறான். அருகே சென்றதும் அவள் மாதவி யல்லள்...செம்படவப் பெண் என்று தெரிகிறது...அவளும் மிரண்டு வேறுபக்கம் போகிறாள்... அதுகண்ட மாதவி, அதிகக் கோபமுற்று வசந்தமாலையிடம் சென்று...]

மாத : பார்த்தாயா—வசந்தமாலி!

வசந்த : பார்த்தேன்—பார்த்தேன்! மாதவி! ஊடலுக்கும் ஒரு அளவு வேண்டுமே...

மாத : அவருக்கு என்னைத் தவிர வேறு யாரிடத்திலோ விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை அவரால் மறைக்க முடியவில்லை. உண்மை வெளிப்பட்டு விட்டது... இருக்கட்டும், வேண்டுமென்றே நான் அவர் மனத்தை நோக வைக்கிறேன்! நானும் வேலோடு ஆடவாரால் காதல் கொண்டதுபோல் நடித்து...

வசந்த : வேண்டாம் மாதவி! விளையாட்டு வினையாகிவிடப் போகிறது...

மாத : அவரெல்லாம் ஆகாது...நீ போய்விடு; அவர் வருகிறார்!

[அங்கே ஒரு வீரனுடைய சிலை இருக்கிறது. அந்தச் சிலையை மாதவி உற்றுப் பார்க்கிறாள். சில, கோவலன் சிலைபோலக் கண்ணுக்குத் தெரிகிறது; சிலையின் எளங்குரிய உடைகளுடன்]

மாத : காதல் தல்வரே! நீர் என்னை உண்மையான காதலோடு தேடி வரவில்லை; என்

பற்களின் மெய்யாகவே முத்துக்கள் என்று கருதி, அவைகளின் விலைபேசும் வர்த்தகன் போல என்னிடம் வந்தீர்!

இதழ்களிலே பவளமிருக்கிறது; அதை எடுத்துப் போகலாமென்று கள்வன்போல் என்னிடம் வந்தீர்! கன்னத்துச் சிவப்பைக் காட்டு ரோஜா எனக்கருதி, கேட்பதற்கு ஆளில்லை...பறித்துப் போகலாம் என எண்ணி என்னிடம் வந்தீர்!

நீர் எப்படி நினைத்து வந்திருந்தபோதிலும் என் உள்ளங் கொள்ளைகொண்டீர்...உடல்...உயிர்...அழகெல்லாம் உமக்கே சொந்தம்! சிலைபோல நிற்கின்ற ஆருயிரே! தென்னை மரச் சோலையிலே என்னைத் தழுவிடவே எப்போது வருகிறீர்?

புன்னை மரத்தில் அன்னம் உட்கார...அதைக் குறித்திருக்கும் பூக்களெல்லாம் விண்மீன் என்றும்...நடுவில் உள்ள அன்னந்தான் அழகு நிலவென்றும் நினைத்துக்கொண்டு, மலர் பூத்துவிடும்.

அழகிய பூம்புகார் நகரத்துக் கலைப்பெண்ணுள் மாதவியைக் காதலால் துடிக்கவிடாமல்...

கண்ணுளா வந்துவிடும்... மாவீரா வந்துவிடும்... மன்னவரே வந்துவிடும்...

[கோபமாக]

கோவ : நிறுத்து... நிறுத்து... மாயக்காரி நிறுத்து!

மாத : அதுதான்!

கோவ : சே! அத்தான்! விஜயமகளே! நிலையில்லா மனம்படைத்த குலம் விளங்க வந்துற்ற குடிகேடி!

கலைகாட்டி...கயல் விழிகாட்டி...மயல் முழுதுங்காட்டி...மயக்குகின்ற பெண் பேய்! உனை நம்பி உளமிழந்தேன், வளமிழந்தேன்; உற்றார், பெற்றார், உறவுகளையும் கொண்ட நண்பர் அனைவருமே வெறுக்கின்ற பண்பு கொண்டேன். உத்தமியாம் கண்ணகியின் உயிர் கருக்கி... உளம் வருத்தி... உற்சாகச் சக்தியிலே...இது வரையில் வீழ்ந்து கிடந்தேன்...இன்றுணர்ந்தேன்...நீ யார் ...நின் குலத்தின் பழம் பெருமை பெண்ண என்ற சேதி.

மாத : அத்தான்!...போதுமத்தான் போதும்! இந்தப் பொல்லாங்கு நேர்வதற்கோ பொழுது விடிந்தது?

கோவ : பொழுது விடிந்தது...பொற் கோழி கூவிற்று! புனித நன்மராம் கண்ணகியை வாடவிட்டுப், புழுதியிலே கிடக்கின்ற பெண் கல்லின் உண்ண வந்தேன்...அந்த இருட்டு மதி நீங்கிடவே பொழுது விடிந்தது; பொல்லாதவளே!

மாத : அய்யோ! எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே? நான் என்ன குற்றம் செய்தேன்?

கோவ : ஆகாகா...... கைகாரி! கானல்வரி நான் பாட, நீ யார் மேலோ மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் காதல் மொழி சிந்தியதை இந்தக் காதுகளால் கேட்டிருந்தேன்!

கணிகை வீட்டுக் கட்டுத் தறியும் கண் காட்டி ஆள்மயக்கும் என்ற உண்மையை அறியாமல் ஏமாந்தேன்...

மாத : அத்தான்! சகிக்க முடியாத சொல்வம்புகளால் என்னைக் கொல்லாதீர்கள்! மாதவி...கணிகைதான்! ஆனாலும், மனம் வேறே; உமையன்றி என் மனம் யாரையும் நினைத்ததுமில்லை...நினைக்கப் போவதுமில்லை...நம்புங்கள் என்னை!

கோவ : கான்யரை ஏமாற்றக் காட்டி வரி...கண் கூடு வரி...முகலிய எட்டுவகை நடிப்பு வரியும் கற்றவளடி நீ...தெரியும் எனக்கு! குமிழ்ப்பு முகமும் குவின்மலர்க் கண்ணும் கொண்டு கொவ்வைப் பழம்போன்ற வாய்மொழியால்...

இனி இந்தக் கோவலனை ஏமாற்ற ஒருக்காலும் முடியாது! அதோ சிலையாக இருக்கின்றானே உன் இலட்சியக் காதலன்...அவன் வரும்வரை காத்திரு! அவன் பொருள் தரும்வரையில் காத்தியாயிரு! பின் காமக்கடையைக் கட்டி...அவன் எதிரே வேறொரு சீமானிடம் நடையைக் கட்டு! போ...போ...உன் குலத்தொழிலுக் குறைவின்றி நடத்து! கோவலன் மதி படைத்தவனோ!! போ, போ, என் எதிரே நிற்காதே! போ!...போ!