காட்சி 17 / 38
காட்சி-17
மாசறு பொன்மகிழ்வு
கண்ணகி வீடு
மூல ஸ்கேன் 51, 52
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[கண்ணகியிடம் தேவந்தி விழா விவரம் கூறுகிறாள்]
தேவந்தி : அந்த யானையைக் காள்கண்ட தளபதிகள் கூட அடக்கமுடியாதாம்; உன் கணவர் அடக்கி விட்டார்! ஊரெல்லாம் புகழ்கிறது அவரை !
கண் : தமிழரல்லவா ?... தேவந்தி! அவர்மீது காயமொன்றும் படவில்லையே?...
[அழுகையும், புன்னகையும் போட்டியிட]
தேவ : அய்யோ, என்ன கவலை? காயம் பட்டால் ஆற்றுவதற்குத்தான் மாதவி இருக்கிறாளே ?...
கண் : மாதவி!... மாதவி!!... என் தங்கை பாக்கியசாலி!!....
[கண்ணீர் பெருக்கெடுக்கக் கோவலன் படத்தின்மீது சாய்கிறாள்.]