பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 15 / 38

காட்சி-15

மனமாறிந்த கோவலன்

கண்ணகி வீடு

மூல ஸ்கேன் 49

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கண்ணகி, நகை நட்டு எதுமின்றி சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறாள். வீட்டில், முன் இருந்த ஆடம்பர நில இல்லை. வீட்டின் பல பகுதிகளில்...அவள் நினைவு செல்கிறது....அந்த நினைவில் கோவலனும் அவளும் கொஞ்சி மகிழ்ந்த பழைய காட்சிகள் கண்முன் தோன்றுகின்றன. பசுவின் முகத்தை அணைத்துக் கண்ணீர் விடுகிறாள். பசவும் கண்ணீர் வடிக்கிறது. மஞ்சத்தில் வந்து அமர்கிறாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் பொல பொல வென்று மஞ்சத்தில் விழுகின்றன... மல்லிகை மலர்கள் முன்பு தூவப்பட்ட காட்சி அவள் நினைவில் வருகிறது. குத்துவிளக்கு. எரியாத திரியிலிருந்து எண்ணெய் சொட்டிக்கொண்டிருக்கிறது—அவள் கண்ணீர் விடுவது போலவே குத்துவிளக்கும் கண்ணீர் விடுகிறது போலும்!... வாயிற்புறம் நோக்கி வருகிறாள்; உள் கூடத்திலேயே!.... கோவலன் வந்து கொண்டிருக்கிறான், வீதியில், வீடு நோக்கி! ஒரு சேவல் கதவண்டை வந்து உள்ளே நுழையப் பார்க்கிறது. கண்ணகி அதை விரட்டிவிட்டு கதவைத் ‘தடால்’ என்று மூடுகிறாள். அப்போதுதான் வாயிற்படியை மிதித்த கோவலன் அதிர்ச்சி யடைந்து...தலையுனிந்து நின்று....திரும்பிப் போய்விடுகிறான். கதவை மூடிச் சென்ற கண்ணகி, கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் கோவலன் திருவுருவப் படத்தின் அருகே வந்து...]

கண்ணகி : அத்தான்!...நீங்கள் வரவே மாட்டீர்களா?...என்னை அடியோடு மறந்து விட்டீர்களா; என் தேவே! எரிமலையின் பெருமூச்சை என்மீது திருப்பிவிட்டீர்களா?...

ஈட்டியிலே கூர்பார்க்க என் இதயந்தான் கிடைத்ததோ! அத்தான்! உங்கள் முத்தார மார்பினிலே முகம் புதைத்துக் கிடப்பதற்குத்; தடந்தோளில் தலை சாய்த்துத் தமிழ்ச் சுவையைப் பருகுதற்குத் தடையேன் அத்தான்!....உற்றாரும் பெற்றோரும் உறவு முறுகின்றார்; உண்மையில், உறங்காமல் உங்கள் துணைவி குமுறுகின்றாள். ஒருமுறை வாருங்கள் அத்தான்...! ஒளிமுகம் காட்டுங்கள் அத்தான்...! அத்தான்! வரமாட்டீர்களா? இந்த ஏழையிடம் இரக்கம் காட்டமாட்டீர்களா? அத்தான்!....