காட்சி 12 / 38
காட்சி-12
இன்ப வாழ்வில் கோவலன்
மாதவி வீடு
மூல ஸ்கேன் 43
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பள்ளியறையில்...... மாதவி மால் தொடுத்துக்கொண்டிருக்கிறாள்...கோவலன் அருகே அமர்ந்து அவள் விரல்களின் அசைவையே பார்த்துக்கொண்டிருக்கிறான்...... மாதவி, அவனைப் பார்த்து...]
மாதவி : என்ன, விழி அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
கோவலன் : உன் விரல் அசைவைத்தான் !...
காந்தள் விரல்களிலே நாட்டியம் தன் கலையழகைக் காட்டுகின்ற விந்தையைத் தான் சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.... மாதவி! நாட்டியக் கலைக்கென்றே படைக்கப் பெற்றவள் நீ !......
மாத : இல்ல !... உங்களுக்காகவே படைக்கப்பட்டவள் நான் !......
கோவ : தவறு — தவறு... நீ படைக்கப்பட்டவள் அல்ல !... உன்னை யாரும் படைக்க முடியாது !... தங்கநிற ஒளிகாட்டும் மேனியிலே தவழ்கின்ற பேரழகை...... சேற் கெண்டை செவ்விதழ்போல் நிறங்காட்டும் இதழ்களிலே ஊறுகின்ற பாலமுதை... கண்ணுடிப் பேழைக்குள் சிறைப்பட்ட கருவண்டு அசிவதுபோல் காட்சி தரும் விழியிரண்டை-கருவற்ற மேகம்போல் இருண்டு-கண்பறிக்கும் வித்தினிலே சுருண்டு - கால்வரையில் எட்டுகின்ற மயில் தோகைபோன்ற மழைக் கூந்தல் அழகை... தேனூற்றில் பலாச்சுளைப் போல் மிதக்கின்ற நாக்கில் படுகின்ற காரணத்தால் சுவைபெற்றுச் சிந்துகின்ற மொழி வளத்தைப் படைப்பதற்குப் பாரினிலே யாருமில்ல !...... உனைப் பார்த்துத்தான் இனிமேல் பாவையர்க்கு அழகைப் படைக்க வேண்டும் எனத் திட்டமிடுவான் படைப்புத் தலைவன் !...
மாத : மன்னு !... மலர் எடுத்து மால் தொடுப்பது சுலபம்! அதைவிடச் சுலபமாகத் தெரிகிறது ஒரு மங்கையைப் பார்த்து ஆடவர், வார்த்தைகளால் வர்ணனை தொடுப்பது !....
கோவ : கண்ணே ! உன்னை வர்ணிப்பதால் வார்த்தைகளுக்கல்லவா அழகு ஏற்படுகிறது! தமிழுக்கு அல்லவா பெருமை உண்டாகிறது!
மாத : அதுபோல, உங்கள் கழுத்தில் இருப்பதால் இந்த மால்க்கும் பெருமை ஏற்பட்டும்!......
[மாலையை அவன் கழுத்தில் போடுகிறாள். கோவலன், பிறகு மாலையைக் கழற்றி மாதவி கழுத்தில் போடுகிறான். இருவரும் ஆனந்தம்.]