காட்சி 27 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 27
காட்சி 27
இடம்:- இன்பபுரி அரண்மனைத் தெரு.
மூல ஸ்கேன் 104, 105
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மகாராஜா மாடியில். மக்கள் தெருவில்)
ஒருவன்:- தீர்ப்பு தெரியுமா?
மற்றவன்:- என்ன? என்ன?
ஒரு:- இளவரசருக்குத் தூக்குத் தண்டனை.
மற்ற:- ஆ!......
(இருவரும் ஓடுகிறார்கள்)
(இரு பெண்கள்)
ஒரு:- இளைய ராஜாவுக்குத் தூக்கா? அட அநியாயமே!
மற்:- அநியாயமா? அனர்த்த காலம் வந்துட்டுது......
(ஓடுகிறார்கள்)
(வயலிலிருந்து கலப்பை சுமந்துகொண்டு வருபவன் "இளவரசருக்குத் தூக்கு" என்ற ஒலி கேட்டு, கலப்பையைப் போட்டுவிட்டு ஓடுகிறான். பெரிய மக்கள் கூட்டம் பரபரப்போடு ஓடுகிறது. மகாவீரரும், விபீஷணரும் இதைக் காணுகிறார்கள்)
விபீஷ:- எல்லோரும் கொலைக்களத்திற்குத்தான் போகிறார்கள்.
மகாவீ:- காரணம்?
விபீஷ:- ஏதாவது புரட்சி ஏற்படலாம்.
மகாவீ:- புரட்சியா?
விபீஷ:- அவர்களை பலாத்காரமாக விடுவிப்பார்கள்.
மகாவீ:- ஆ!
விபீஷ:- அடுத்தபடி அரண்மனையிலும் நுழையலாம். மகாராஜா! இந்தச் சிறு புரட்சியிலேயே நம் சிம்மாசனத்தைக் கைப்பற்றி விடுவார்கள்.
மகாவீ:- இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். விபீஷணரே! வேண்டிய ஏற்பாடுகள் செய்யுங்கள்.
விபீஷ:- ஏற்பாடென்ன? ஈட்டி முனையைக் காட்டினால் இந்தப் புரட்சியெல்லாம் பொங்கிவிடும். முதலில் பட்டாளத்தை அனுப்புகிறேன்.
மகாவீ:- உம். அனுப்புங்கள்.
விபீஷ:- அதைத் தொடர்ந்து நானும் செல்ல வேண்டும்.
மகாவீ:- ஆகட்டும் புறப்படுங்கள்.
(வேகமாகப் போகிறான் விபீஷணன்)