காட்சி 14 / 30
முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.
காட்சி 14
காட்சி 14
இடம்: புத்தன் முகாம்
மூல ஸ்கேன் 52, 53
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(வெளிச்சம். சூரிய உதயமாகிவிட்டது. சித்ரா எழுந்து பயணப்படுகிறாள். சூரிய உதயத்தைக் குறித்து ஒரு துறவி பாடிக்கொண்டு போகிறான். சித்ரா பயணப்படுவதற்கு முன் குமரியும், புத்தனும் பெட்டியைத் திறந்து பார்க்க,அதில் சித்ரா வைத்திருந்த கடிதச் சுருள்களைத் தாங்கள் சேகரித்த உண்மை ஆதாரம் என்று எண்ணி மூடிவிடுகிறார்கள். சித்ரா விடைபெற்றுச் செல்லும் காட்சி மௌனமாகவே நடைபெறுகிறது)
புத்த:- வீரர்களே! சித்ரா தாயார் வீட்டுக்குச் சென்று விட்டாள். விபீஷணன் இமயா இருவரும் தனியேதான் இருப்பார்கள். சித்ரா இருந்தால் அவள் கணவனைக் கைதுசெய்ய மனம் கூசும். அவர்களைக் கைதுசெய்ய இதுதான் நல்ல சந்தர்ப்பம்.
குமரி:- ஆம். ஆதாரங்கள் நாம் அபகரித்திருக்கிற செய்தி தெரிந்தால், விபீஷணன் வேறு சூழ்ச்சியில் இறங்கிவிடுவான்.
புத்த:- அதற்குள் அந்தக் குள்ளநரிகளைக் கூண்டில் நிறுத்திவிட வேண்டும். புறப்படுங்கள்.
(புறப்படுகின்றனர்)