பொருளடக்கம்ஒரே முத்தம்

காட்சி 13 / 30

முதன்மை நாடகம் — 30 காட்சிகள்.

காட்சி 13

காட்சி 13

இடம்: தெருவில்.

மூல ஸ்கேன் 51, 52

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

(விபீஷணன் காவிகள் இருவர் குடிவெறியில் மோதிக்கொண்டு நடத்தல்)

1-வது கா:- ஏய்! இன்னிக்கு அகப்பட்டவில்லன்னு அய்யா ரொம்பக் கோபிப்பாரு.

2 வது கா:- ஏண்டா! பொம்பளை அகப்பட்டதுன்னு சாமான் யாரா? அதிலும் மூக்கு முழி எல்லாம் உருண்டு திரண்டு சுத்தமா ஆளு, அழகிய செந்தாமரைப் பூமாதிரி வேணும்னு என்னடா செய்யறது?

1-வது கா:- தினம், தினம் புதுசு புடிக்கிறதுன்னு முடியுதா? இந்த வட்டாரத்துக்கு நாம்பளே ஒரு பொம்பளை ஆயிடலாம்போல இருக்கு!

2-வது கா:- ஏண்டா முட்டாள், ஆம்பளை பொம்பளை யாக முடியுமா? போதையில் உளறுறே.

1-வது கா:- போடா! சாட்சாத் மகாவிஷ்ணுவே பொம்பளையா ஆனாரு. பரமசிவனும் அவருமா ஒரு பிள்ளையும் பெத்தாங்க!

2 வது கா:- அவங்கள்லாம் கடவுளுடா? பொம்பளையாவும் மாறுவாங்க, புள்ளையும் பெறுவாங்க!

(கடவுள்கள். விஷ்ணு, நாரதர் பெண்களாய் மாறிப் பிள்ளைபெற்ற கதை 1-வது காலி பாட 2-வது காலி பின்பாட்டுப் பாட கும்மாளமடித்துக்கொண்டே செல்லல்)

2 வது கா:- ஏய்! அதோ அந்தக் குடிசையில் விளக்குத் தெரியுது!

1 வது கா - அது ஒரு விபசாரக் கடையடா.

2 வது கா:- அப்ப சரி, நம்ப விபீஷணருக்கு சரக்கு வாங்கலாம், வா, வாடா!

(போகிறார்கள்)