பொருளடக்கம்நச்சுக்கோப்பை

காட்சி 12 / 18

சீன். 12.

சீன். 12.

மூல ஸ்கேன் 43, 44

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம் : ரோடு

சிவ : மது! இந்த உலகை நிலைகலக்கியதே அது!

பழனி : அழகப்பன் செத்தான்.

சிவ : மது! இந்த உலக நிலைமைக் கலக்கியதே அது!

பழனி : நாக்குடன் நின்றுவிடாதே! நன்றாகச் சிந்தித்துப் பார் தோழனே! சாது எனப் பெயர் கொண்டோரும் அரசியல் மேடையிலே வாது புரிப்வோரும் மதுவின் முன்னே மண்டியிட்டு ஒழுக்கம் என்னும் ஒற்றையடிப் பாதையிலே வழுக்கிவிழுந்து நாசமடைகிறார்கள். எத்தனையோ குடும்பங்களைக் குலைத்து எத்தனையோ நாடுகளை நசுக்கி நாவில்லாப் பூச்சிபோல் செய்தது அந்த மது வல்லவா? அந்த மதுவுக்கு இந்த நாட்டிலே எத்துணை ஆதிக்கங்கள்! ஆதிகாலத்திலே சோமபானம் என்ற வேடத்திலே வந்து புகுந்த மது, ஆதிக் குடிமக்களின் அறிவைப் பாழாக்கியது. அதை அருந்தினோர் எல்லாம் அதன் அடிமையாகி விடுகிறார்கள்.

சிவ : மது! இந்த உலகை நிலைகலக்கியதே அது! என் வாழ்நாளில் வலிமை மிக்க ஒரு பகுதியை, இளமையின் தொண்டை, நட்பின் நலத்தை வாலிப வேகத்தை நசுக்கி நையப்புடைத்து நாயினும் கடையனாக்கிற்று. மதுவினால் மதி கெட்ட மடையனானேன். புதைக்கப்படும்போது புத்துணர்வு பெற்றேன் பழனியப்பா, என்னையும் உன்னோடு சேர்த்துக்கொள்ள மாட்டாயா? முடியுமா?

பழனி : முடியும்.

சிவ : அப்படியானால் இந்த நாட்டிலே மடமை மடியும். வா. போகலாம்.