காட்சி 11 / 18
சீன். 11.
சீன். 11.
மூல ஸ்கேன் 43
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: அழகப்பன் வீடு
(எல்லாரும் இருத்தல்)
அழ : மாமா! இனி நான் பிழைக்கமாட்டேன்.
மணி : தம்பி! நீங்க ஒண்ணுக்கும் பயப்படவேண்டாம். நான் போய் சுப்ரமணியசாமிக்கு ஒரு தேங்காய் ஒடிச்சிகிட்டு வர்றேன்.
(குருடன் பாட்டு)
அழ : ஐயோ! குடிக்கும் கூத்திக்கும் செலவிட்ட பணத்தை உழைக்கமுடியாத ஏழைக்குக் கொடுத்திருந்தால் இம்மாதிரி வருமா, சாந்தா! உன்னை வேதனை வாழ்வில் விட்டுச் செல்கிறேன். உன் வாழ்வை வாட்டிக்கொள்ளாதே! மறு மணம் செய்துகொள் கண்ணே!-சாந்தா! சாந்தா!
(இறத்தல்)