காட்சி 10 / 18
சீன். 10.
சீன். 10.
மூல ஸ்கேன் 41, 42
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: ரோடு.
நொண்டி வந்தல்.
சிவகுரு, பழனி சந்திப்பு.
நொ : என்ன உலகமடா! கல்லுக்கும் மண்ணுக்கும் கோவில் கட்ட திருப்பணி. என்போன்ற ஏழைக்குத் திருப்பணி செய்ய யாருமில்லை, என்ன மடமை மிகுந்த நாடு.
(பாட்டு) போதல்
(நண்பர் குழாம் வருதல்)
சிவ : கணபதி, எங்கேடா போறே?
கண : ஆபீசுக்கு போறேன்.
சிவ : உனக்கு விஷயம் தெரியுமாடா?
கண : என்னப்பா அது?
சிவ : நம்ப அழகப்பன் சிக்கா இருக்கானும். போய்ட்டு வரலாம்.
கண : நான் வரலே. ஆபீசுக்கு டைம் ஆச்சி.
சிவ : டேய் ஜம்பு! நீயாவது வாரியா?
ஜம் : போப்பா. அன்னைக்கு ஒரு கிளாஸ் கேட்டதற்கு அரை கிளாஸ் கொடுத்தான். அவனைப் பார்க்கிறதா? நான் போரம்ப்பா.
(இவர்கள் பழனியப்பன் பார்த்துக்கொண்டிருத்தல்)
சிவ : அடே, நன்றிகெட்ட பசங்களா! யாரப்பா நீ? என்னையே பார்த்துக்கிட்டே இருக்கே.
பழனி : நான் அழகப்பன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கேன். என்பெயர் பழனியப்பன்.
சிவ : ஓ! நீதான் பழனியப்பன் என்பவனா?
பழனி : ஆமாம்.
சிவ : ஆமாம். அழகப்பன் செத்துட்டானா? இல்லை. பிழைச்சிட்டானா?
பழனி : பிழைக்கமாட்டான்.
சிவ : ஏன்?
பழனி : எல்லாம் மதுவின் திருவிளையாடல்.
சிவ : என்ன! மதுவுக்குக்கூட ஒரு திருவிளையாடல் உண்டா?
பழனி : ஆம். மது! மது! இந்த உலகை நிலை கலக்கியதே அது!
சிவ : மது! மது! ஆஹா! இந்த உலகை நிலை கலக்கியதே அது!