காட்சி 4 / 18
சீன். 4.
சீன். 4.
மூல ஸ்கேன் 20, 21
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம் ரோடு
(கந்தனும் அய்யரும் வாது பேசல்)
(அய்யர் மூட்டையுடன்)
கந்: ஓய் அய்யரே! இப்படி வாரும்! என்ன மூட்டை அது?
அய் : அதுவா... கல்யாணத்திலே கொடுத்த சாமான்கள்.
கந்: எவ்வளவு அரிசி இருக்கும்?
அய் : ஏன்? 5 படி இருக்கு.
கந்: ஓய்! உனக்கு எதுக்கு 5 படி அரிசி? இப்பத்தான் ரேஷன் காலம்னு தெரியுமல்ல?
அய் : எந்தக் காலமா இருந்தா எனக்கென்ன? ரேஷன் ஆபீஸர் வீட்டிலேயே நான் போய் வாங்கிவருவேனே.
கந்: தொலைஞ்சு போ. அரிசியை நீ எடுத்துக்கோ பணம் ஐந்து ரூபாயையும் கொடு.
அய் : எதுக்கப்பா நீ கேக்கறே!
கந்: கொடுக்கிறியா இல்லையா?
அய் : ஐயோ! கொடுக்கிறேன். நீ கிட்டவராதே, பாருங்க. கொடுக்குறத்துக்கு அவங்களையும் படைச்சி, வாங்கறத்துக்கு எங்களையும் உண்டு பண்ணி, அடிச்சிப் பிடுங்கறத்துக்கு ஆண்டவன் இவங்களையும் படைச்சிருக்கானு. ஏ, கடவுளே! காலம் கெட்டுப் போச்சின்னு.
கந்: ஆமா! கருப்புக்கோழி வெள்ளை முட்டை மிட்டுச்சு ஏ பணமே! பகல் இரவு என்று பாராது பாடுபட்டுப் பசி பசி என்று ஏங்கி நடு நிசியிலே நின்றாலும் இதோ கொஞ்சம் புசி புசி என்று கூறிடாத இரும்பு நெஞ்சரின் இரும்புப் பெட்டியில் தூங்கும் பணமே! குச்சி வீட்டில் ஏழை உணவின்றி ஓய்ந்து கிடக்கவும், மச்சி வீட்டில் பணக்காரர்கள் மதுரகீதம் பாடவும் பாழும் நிலையை உண்டாக்கிய பணமே! உலகத்தின் உயிரே! இன்னும் எத்தனை நாளைக்கு இந்தச் சோம்பேறிகளின் வீட்டில் வாழப் போகிறாய்? வரப்போகிறது பாட்டாளியின் படையெடுப்பு! வந்து சேர். பார்த்துக் கொள்ளுகிறேன். (பழனி வருதல்)
பழ : ஆஹா! இம்மாதிரியான உண்மையான தோழர்கள் ஓராயிரம் பேர்கள் இருந்தால் போதுமே, இந்நாட்டிற்கு! கனல் கக்கும்படி பேசி ஐயரை மடக்கிய கந்தன் அழகப்பனின் வேலைக்காரன். இவனுக்கு இருக்கும் அளவு இவன் எஜமானனுக்கு இருந்தால்...? என்னவோ, மாணவரையும்,தொழிலாளரையும் நம்பித்தான் இருக்கிறது நாடு. பார்ப்போம் ஒருகை.