காட்சி 3 / 18
சீன். 3.
சீன். 3.
மூல ஸ்கேன் 18, 19, 20
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: கல்யாண மண்டபம்
அழகப்பன், சாந்தா, மணியப்பர்
அய்யர், சிஷ்யன்.
(நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் வரல்)
மணி : டேய் கந்தா! அய்யர் எங்கேடா?
கந்: இதோ வராங்க.
மணி : வாங்க சாமி.
அய் : வர்ரேன்.
மணி: சாமி,நாழியாச்சி.சீக்கிரம் ஆகட்டும்.
அய்: என்ன முதலியார்வாள்! எல்லாம் கொண்டு வரச்சொல்லுங்கோ. பெண்ணு மாப்பிள்ளையை அழைத்து வாருங்கோ.
(அய்யர் மந்திரம் சொல்லுதல். பிறகு மாலை போடல். மணவரையைச் சுற்றுதல்.)
அய்: சாந்தா ! நமஸ்காரம் செய்துக்கோ.மாப்பிள்ளைவாள் ! நீங்களும் நமஸ்காரம் செய்துகொள்ளுங்கோ.நலுங்கு பாடுங்கோ.
(பாடல்)
அய்: முதலியார்வாள்! பொண்ணு மாப்பிள்ளையை உள்ளே அழைச்சுண்டுபோய் பாலும் பழமும் கொடுங்க. சரி, நான் போகட்டுமா?
மணி : போய்ட்டு வாருங்கோ.
அய்: சரி.வர்றேன். (உள்ளே போதல்)
மணி : என்ன சாமி, இப்படியும் அப்படியுமாபோறிங்க. என்ன விஷயம?
அய்: ஒன்றுமில்லை, தெக்ஷணை கொடுங்க.
மணி : இதை அப்பவே சொன்னா என்னாங்க சாமி? இந்தாங்க.
சிஷ்: மாமா! எனக்கும்.
அய்: முதலியார்வாள்! பிச்சுமணிக்கும் கொடுங்கோ. (பணம் கொடுத்தல்)
(பிச்சுமணி பணம் வாங்கிக்கொண்டு வெள்ளிக்கிண்ணத்தைத் திருடுதல். கந்தன் பிடித்தல் )
பிச்: மாமா - மாமா -உ
அய் : என்னடா - முதலியார்வாள்!
மணி: ஏய்,என்னடா?
கந்தன் : இதைத் திருடிட்டாருங்கோ?
மணி : ஏன் சாமி,இப்படிச் செய்யலாமா?
அய் : இதுக்குப் பேரு திருட்டா?
கந்: பின்னே என்ன களவா?
அய் : முதலியார்வாள்! பிராமணாள் எதை வேணும்னாலும் எந்த இடத்திலே இருந்தாலும், எடுத்துக் கொள்ளலாம்னு மநுதர்ம சாஸ்திரத்திலே எழுதி இருக்கு.
மணி : அப்படியா! அப்போ எடுத்துக்குங்க?
அய்: வேண்டாம்.
(அய்யர் உள்ளே போதல்,)
மணி : ஏய் கந்தா! ஆகவேண்டிய காரியத்தை எல்லாம் பாருடா.