காட்சி 35 / 47
காட்சி 35
காட்சி 35
மூல ஸ்கேன் 131, 132
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(அமைச்சர் வீடு - அரிஹரநாதர், அமைச்சர், குருநாதர் மூவரும்)
அமை: என் மகளை அபகரித்துச் சென்றதும் அந்தக் கூட்டம்தான் - அரசனைக் கொல்ல முயன்றதும் அந்தக் கூட்டம்தான் - அவர்களைச் சும்மா விடக் கூடாது!
அரி: இவ்வளவும் செய்து விட்டு, சதி செய்தது குருநாதர் என்றல்லவா பத்திரிகை வெளியிடுகிறார்கள் - அந்தப் புதுமைப்பித்தனையும் விடக் கூடாது அமைச்சரே!
குரு: நாட்டுக்கும் நமக்கும் கேடு வந்து விட்டது! அப்பனே! ஆண்டவனே!
அமை: அச்சமில்லை! அச்சம் தேவையே இல்லை! நாட்டு அதிகாரத்தை என் கையில் மாற்றுவதற்கு முன்பாக இந்தப் புரட்சிக் கூட்டத்தைப் பொசுக்கியதாக வேண்டும்! பொன்னழகன் கூட்டத்தைக் கண்டோடு கைது செய்ய வேண்டும்! அந்தப் புதுமைப்பித்தனை சுட்டுத் தள்ள வேண்டும்! சீமான் சபையை உடனே கூட்டி அவசர உத்தரவு பிறப்பிக்கிறேன்.
குரு: சந்தோஷம்! நன்றே செய்க! அதுவும் இன்றே செய்க, அமைச்சரே!
அரி: நானும் நமது பத்திரிகையில் எழுதிவிடுகிறேன். புதுமைப்பித்தன் ஒரு பலாத்காரப் பிரியன் என்று கொட்டை எழுத்தில் போடுகிறேன்! அவன் தான் அரசரைக் கொல்ல முயற்சித்தான் என்று உண்மையை ஊரறிய எழுதுகிறேன்!
அமை: ஆகவேண்டியவைகளைக் கவனிப்போம் - முதலில் சீமான்கள் சபை கூட்டும்!
குரு: சந்தோஷம்! சந்தோஷம்!