காட்சி 22 / 47
காட்சி 22
காட்சி 22
மூல ஸ்கேன் 94, 95
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(வீதி ‘மணிமகுடம்’ ஏட்டை ஒருவன் கூவியபடி விற்கிறான். பலரும் வாங்குகிறார்கள், படிக்கிறார்கள், சூழ்ந்து நின்று!)
‘மணிமகுடம்’ ஆசிரியர் புதுமைப்பித்தன் - கொடிக்கால் நகரில் பொன்னழகன் அல்லி அறப்போராட்டம் - பொன்னழகனைக் கொல்ல முயற்சி - கொடிக்கால் நகரில் அரண்மனைக் குதிரைப் படைகள் நடத்திய கொடுமைகளைக் கேட்டு, அரசர் மணிமாறனே மனம் நொந்து போயிருக்கிறாராம் - குருநாதர் மந்திரி அரசர் மூவரிடையே கலகம் நடந்து கொண்டிருப்பதாக செய்தி உலவுகிறது. இன்னும் பல உண்மைகள் விரைவில் வெடிக்க இருக்கின்றன.
தலைநகரத்திலே மாபெரும் பொதுக்கூட்டம் - புதுமைப்பித்தன் நீண்ட சொற்பொழிவு - குருநாதருக்கும், ‘மக்கள் தொண்டன்’ பத்திரிகைக்கும் எதிராக லட்சோப லட்சம் மக்கள் எழுப்பிய முழக்கம், வானை எட்டியது! “மக்களாட்சி தேவை” என்று கடல் அலைபோல் ஒலி எழுப்பினர் - கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏமாற்றி வாழும் எத்தர்களுக்கு இனி வாழ்வில்லை! வளமில்லை! நாட்டில் வேலையுமில்லை! எழுச்சியுற்ற மனிதன்தான் - இனி ஏறுநடை சிங்கந்தான் - கொழுத்து விட்ட உமிகள்தான் இனிக் குள்ளநரிக் கூட்டத்தார் - பழித்து விட்டான் பகுத்தறிவால்.
இனி, பக்தி - மதம் - கடவுள் எல்லாம் பாழ்! பாழ்! பாழ்!
(அப்போது அரசாங்க வீரர்கள் படிப்பவர்களை மிரட்டி அவர்களிடமுள்ள ஏடுகளைப் பிடுங்கி எறிதல் - ‘மணிமகுடம்’ விற்கும் மனிதனையும் கைது செய்கிறார்கள்.)
(அதே வீதியில் ‘மக்கள் தொண்டன்’ ஏடு விற்பவன் கூவுகிறான். அதை யாரும் வாங்கவில்லை - கடைசியாக, வியாபாரியே ஒரு பத்திரிகையை எடுத்து உரக்கப் படிக்கிறான்.)
“மக்கள் தொண்டன் ஆசிரியர் அரிஹரநாதர் - நாளைய தினம் சீமான்கள் சபை கூடுகிறது. கோயில் கட்டுவது பற்றி நேரிலேயே தனது சம்மதத்தைத் தெரிவிக்க, மணிமகுட மன்னர் மணிமாற மகாராஜா சீமான் சபைக்கு விஜயம் செய்யப் போகிறார். மன்னருக்கு உடல் நலமில்லாமல் இருந்தாலுங் கூட, நாளைய தினம் சபைக்கு வந்த பிறகு மகாராஜா நீண்ட நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு உடல் நிலையை சரி செய்து கொள்வார்!”
(செய்தி கேட்டவர்கள் வியப்படைதல்)
ஒருவன்: ஏய் ராஜாவே வர்றாரு; சபைக்கு நாளைக்குப் போகலாண்டா!