காட்சி 19 / 47
காட்சி 19
காட்சி 19
மூல ஸ்கேன் 80, 81
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(குருநாதர் மடாலயம் - அமைச்சர், குருநாதர், அரிஹர நாதர் மூவரும் இருக்கிறார்கள்)
அரி: (கையிலே மணிமகுடம் ஏட்டுடன்) இந்த நிலைமைகளை வளர விடக் கூடாது! யார் அந்தப் புதுமைப்பித்தன்? அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அரசன் கையெழுத்துப் போடாத செய்தி அவனுக்கு எப்படி தெரியும? அவசரமாகவும், அவசியமாகவும் கவனிக்க வேண்டும் அமைச்சரே! இல்லாவிட்டால், நாடெல்லாம் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!
குரு: அரிஹரநாதரே! பத்திராதிபர் - ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படிப் பதறலாமா? எத்தனையோ பொய்களை திரிக்கவும், உண்மைகளை மறைக்கவும் கற்றிருக்கிற நீர் இதற்குப் பயப்படலாமா?
அமைச்சரே! நான் சொல்லுகிறேன், உமது விசேஷ அதிகாரத்தை உபயோகித்து உடனே கொடிக்கால் நகரை காலி செய்ய வேண்டும்! கோயில் எழுப்பும் தீர்மானமும் அமுலுக்கு வரவேண்டும்.
அமை: சரியான யோசனைதான்! தீர்மானம் செயலுக்கு வராவிட்டால் ‘மணிமகுடம்’ பத்திரிகைச் செய்தியை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள். இப்போதே உத்தரவிடுகிறேன். கொடிக்கால் நகரம் காலி செய்யப்பட வேண்டும் - கோயிலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறவேண்டும்.
அரி: சபாஷ்! சபாஷ்! மக்கள் தொண்டன் முன் பக்கத்திற்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது.