காட்சி 9 / 47
காட்சி 9
காட்சி 9
மூல ஸ்கேன் 49, 50
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
(மணிமகுடபுரி வீதிகளில் ‘மக்கள் தொண்டன்’ ஏடு விற்பனையாகிறது)
ஏடு விற்போன்: சீமான் சபை தீர்மானத்தில் அரசர் கையெழுத்துப் போட்டு விட்டார். தேவாலயம் கட்ட தீவிர ஏற்பாடுகள் - அமைச்சர் அறிக்கை! தேவாலய வரி விதிக்கப்படும்! - குருநாதர் எழுதியிருக்கும் தெய்வீகக் கட்டுரையுடன், மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்! மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்!
(என்று கூவி விற்கிறான்) அப்போது அங்கு வந்த அல்லி, அந்த ஏட்டை வாங்கிப் படிக்கிறாள்; திடுக்கிடுகிறாள், வேகமாகத் திரும்புகிறாள்)
(பத்திரிகைச் செய்தி நாடெங்கும் பரவுகிறது)