பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 19 / 21

காட்சி 19

காட்சி 19

மூல ஸ்கேன் 116

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: ரோடு

(தசாவதாரம் தனக்குள் பேசிக் கொண்டே வருகிறான்.)

தசாவ:— எமனாவது ஒண்ணாவது... எமன் தானே வருவது... சுத்த பயந்தாங் கொள்ளி மனுஷன்... உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை—அச்சமில்லை—அச்சம் என்பதில்லையே...

(திடீரென எதிரே எமன் நிற்கிறான்... அசைவின்றி)

தசா:— ஆ!!... எமன்...

(கண்களை முடிக் கொண்டு கீழே உட்காருதல்... இருட்டில் எமன் மறைந்து—ஒரு முரடான தொழிலாளி மீசையை முறுக்கிக் கொண்டு நிற்கிறான்)

(அவனை உற்றுப் பார்த்து விட்டு—பெருமூச் செறிந்தவாறு)

தசா:— எமன் இல்லியா?...

தொழி:— நான் ஒரு ஓட்டர்... என்கையிலே ஒரு வாக்குச் சீட்டு இருக்கு...

தசா:— ஓட்டர்!... ஓட்டர்!! அப்பா, நீ வர்ர எலக்ஷனிலே நான் தானே உங்களுக்கு எமன் வர்ரேன்...

(போகிறான்)

தொழி:— (அவனையே பார்த்தவாறு நின்றிருந்து) எமன்!... ஹே முட்டாள்! நீ எங்கடாப்பா இருக்கே? ஆபத்பாந்தவா! அனாத ரட்சகா!...

(திரை)