பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 17 / 21

காட்சி 17

காட்சி 17

மூல ஸ்கேன் 114, 115

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: சொர்க்கம்

(திரவியம் பிள்ளை மகாத்மா காந்திக்கு மாலை போடுதல்.)

கா:— நிறுத்து! நிறுத்து! போடாதே மாலையை!

(தடுக்கிறார்)

திர:— ஏன் ஐயனே தடுக்கிறீர்கள்?

கா:— காங்கிரசைக் கலைத்துவிட்டு வந்து எனக்கு மாலை போடுங்கள் என்று அப்போதே சொன்னேன்; அதைச் செய்யாமல் மாலை மட்டும் போட்டு என்னை மயக்கப்பார்க்கிறாயா? மாலையா இது? நன்றாகப் பாருங்கள். எலும்புத்தூள்களைப் பொறுக்கி அரும்பு மாலையென எனக்குப் போட வந்து விட்டீர்களா? நிரபராதிகளின் இரத்தத்திலே தோய்ந்த வெள்ளை மலர்கள எடுத்து ரோஜா மலரெனத் தொடுத்துான் கழுத்திலே தொங்க விடப் புறப்பட்டீர்களா? இதோ என்னை ராஜஉடை ராஜ போகங்களோடு வாழவைத்து என் மன நிம்மதியைக் குலைத்து என்ன இந்தச் சிறைச் சாலையில் சித்திரவதைசெய்து கொண்டிருக்கிருனே எமன். இந்த எமனை விடக் கொடியவர்கள் நீங்கள். என் முன்னே நில்லாதீர்கள். போய்விடுங்கள்!

திர:— அப்படி என்ன அபச்சாரம் செய்தோம் தங்களுக்கு?

கா:— என்னை இங்கு அனுப்பி வைப்பதற்கு நீங்களெல்லாம் பட்டபாடு கொஞ்சமா? உங்களோடு இருந்தால் நீங்கள் செய்கின்ற அக்ரமன்களையெல்லாம் தட்டிக்கேட்கிறேன். தடுத்து நிறுத்தப்பார்க்கிறேன் என்ற வெறுப்பில் என்னைப் பாதுகாப்பதற்குக் கூட அக்கறை எடுத்துக்கொள்ள நாதியில்லை. வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப்போன பலமான இராணுவம் இருந்தது. அதுவும் போதாவதன்று படை பலத்தைக் கோடி கோடியாகச் செலவிட்டுப்பெருக்கினீர்கள். எத்தனை இருந்தென்ன? பொட்டென்று முடித்து விட்டான் காரியத்தை! இங்கே சொர்க்கத்திலே சொல்லொணாவேதனையில் உழன்று கொண்டிருக்கிறேன். என்னைத் துரந்தினீர்களே பாவிகளே! என் ஆசைக்கும் அன்புக்கும் உரிய உடைமைகளக்கூடக்கொள்ளக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டீர்களாம்! நான் வாழந்த குடிசையை எழில் மிகுந்த இருட்டு மண்டபமாகமாற்றி கட்டி அந்த மண்டபத்துக்குள் களவௌவால்களைத் தோரணமாகத் தொங்கவிட்டிருக்கிறீர்களாம்! பணக்காரப் பச்சோந்திகளத் தாழ்வார மெங்கும் விளையாடவிட்டிருக்கிறர்களாம்! வான் கொழிகளை மண்டபத்து முற்றத்திலே ஆடவிட்டுக் கொள்கையற்ற கொட்டான்களின் இசை முழங்கக் செய்திருக்கிறீர்களாம். கொம்பு மாழ்களக் கொழுப்பேறு மட்டும் வளர்த்து ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு மணபடத்தைப் போர்க்கள மாக்கியிருக்கிறீர்களாம்!

திர:— ஐயனே!

கா:— அடப்பாவிகளே! நான் நவகாளிப் பயணத்தின் போது ஊன்றிக் கொண்டு நடந்த அருமை மிகு கைத்தடி மோஸஸ் கதையிலே வருவதைப் போல் பாம்பாக மாறிப் பாட்டாளி மக்களைக் கடித்துக் கொல்கிறதாம்! என் இடுப்பிலே இருந்து எடுப்பாகத் தொடங்கிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு கெடிகாரம் உங்களால் பத்திர படுத்தப் பட்டிருக்கும் என்று எதிர் பார்த்தேன். அந்தக் கெடிகாரத்தை கள்ள மார்க்கெட் காரர்களுக்கு உரிமையாக்கி நேரம் பார்த்துக் கொள்ளையடிக்கச் சொல்லி விட்டீர்களாம். என் காலணி பட்டு சின்னஞ்சிறு ஜீவன் கூடச் செத்து விடக் கூடாதென்று நான் ஏங்குவேன். இப்போது அந்தக் காலணியை நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் மாட்டிக் கொண்டு ஆயிரக் கணக்கான மக்களை அடக்கி—மிதித்து—துவைத்து—சேறாக்குகிறீர்களாம்!

(திரவியம் பிள்ளை மெளனம்)

கா:— எல்லாமே தொலையட்டும். என் மூச்சுப்போன்றதும் என் இருதயம் போன்றதுமான என் அன்புக் குழந்தையாம் “ஹரிஜன நலம்” என்ற செல்வத்தையாவது ஒழுங்காகப் பாதுகாத்திருக்கிறீர்களா? என் இன்பக் குழந்தை, சவலைப் பிள்ளை போல் அல்லவா காட்சி தருகிறது? சளி ஒழுகும் முக்கு! பருக்கை உதிரும் வாய்! தள்ளிய வயிறு. கும்பிப்போன கை, கால்கள் எழுபது வயதுக்கிழங்கள் வடுவது போன்ற இழுப்பு மூச்சு; இவ்வண்ணம் தள்ளாடித் தள்ளாடித் தடுமாறும் நிலையில் அல்லவா நான் பெற்ற மாணிக்கத்தை நடுத் தெருவில் சாக்கடையோரத்தில் புழுதி மேட்டில் நீர்க்கதியாக விட்டு விட்டீர்கள். இந்த லட்சணத்தில் உன் அழுக்கேறிய கைகளால் எனக்கு மாலை வேறா போட வந்து விட்டாய்? போ! போ! என் முன் நில்லாதே!

(திரவியம் பிள்ளை கீழே விழுதல்)

(திரை)