பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 16 / 21

காட்சி 16

காட்சி 16

மூல ஸ்கேன் 110, 111, 112, 113, 114

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இடம்: உல்லாச மண்டபம்

(உல்லாச மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் சிறு குழந்தைகளின் தலைகள் கும்பலாகக் கிடக்கின்றன.)

திர:— உல்லாச மண்டபமென்றானே! இதற்குப் பெயர்தானா?

(தலைகளைப் பார்த்து)

ஐயோ! இதென்ன குழந்தைகளின் தலை! இதுவா உல்லாச மாளிகை?

(தளபதி வருகை)

தள:— ஆமாம்! இதுதான் உல்லாச மாளிகை! கொட்டிக்கிடக்கும் குழந்தைகளின் தலைகளை என்ன வென்று நினைத்தாய்! இவைதான் எங்கள் காட்டு உருளைக் கிழங்கு! எங்கள் உல்லாச மாளிகையைச் சுற்றி விளையும் பொருள் இதுதான்.

திர:— ஐயோ! ஆமாம், நீங்கள் யார்?

தள:— என் பெயர் ஸ்ரீமயானம். எமலோக ராணுவத் தளபதி. என்னிடைப் படிதான் நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப் படும். அப்படி வகுக்கப் பட்ட நிகழ்ச்சியை ஒட்டித்தான் எமதர்ம ராஜனுக்கு முன் உங்களைப் பேட்டிகாண வந்திருக்கிறேன்.

திர:— அப்படியா? என்னய்யா இது? குழந்தைகளின் தலைகளைக் கொட்டி விட்டு அந்த விடத்தை உல்லாச மண்டபமென்கிறீர்களே!

தள:— எங்கள் நாட்டு உல்லாச மண்டபத்துக்கு உள்ளே இப்படிக் குழந்தைகளின் தலைகள் கொட்டப் பட்டிருக்கும். ஆனால் உங்கள் நாட்டில் உல்லாச மண்டபத்துக்கு வெளியே குழந்தைகளின் தலைகளைப் பொறுக்கலாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!

திர:— அபத்தம்! அபாண்டம்! யார் சொன்னது அப்படி? பொய்! பொய்! எல்லாம் பொய்!

தள:— இதுவரை குடியேறிய எல்லோரும் ஒத்துக் கொண்ட உண்மையை நீர் மறுக்கிறீர். இதோ பொறுக்கிக் குவிக்கப்பட்ட அத்தனை தலைகளும் உங்கள் நாட்டிலே இருந்து கொண்டு வரப்பட்டவைதான். இவைகளில் பல, கல்யாணமாகாத பெண்களின் கருவிலே உதித்தவை. பல விதவைகளின் வயிற்றிலே விளைந்தவை; ஆயிரக்கணக்கானவை ஆற்றிலும், குளத்திலும் மிதந்தவை. ஏராளமான தலைகள் வறுமை வயலில் பொறுக்கப்பட்டவை. சில குழந்தைகளின் நெற்றியில் அவமானச் சின்னம் குத்தப்பட்டிருக்கும். சிலவற்றின் கழுத்தில் தாயின் கட்டைவிரல் ரேகைகள் அழுத்தமாகப் பதிந்து இருக்கும். அந்த ரேகைகளை ஆராய்ச்சி செய்ததில் ஈவு இரக்கமுள்ள பெண்களின் ரேகைதான் அவையென்றும் எங்கள் ஆஸ்தான ரேகை நிபுணர்கள் முடிவுகூறியிருக்கிறார்கள். சில குழந்தைகளின் கருவிழிகள் வட்ட வடிவமான அசோகச் சக்கரங்கள் போலவே அமைந்திருப்பதையும் கண்டோம். அது பற்றிய ஆராய்ச்சியை எமது விஞ்ஞான மேதை ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். இன்னும் முடிவு வெளிவர வில்லை. இப்பொழுது என்ன சொல்லுகிறீர்?

திர:— சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?

(என்று தலைகுனிகிறார். அப்போது தூதுவர் ஒரு கிண்ணம் கொண்டு வருதல்.)

தள:— இம்! குருதி பானம் அருந்தும்!

திர:— ஐயோ! என்ன இது?

தள:— பொங்கி வழியும் இரத்தம்;

திர:— இரத்த பானமா? வேண்டாம்! வேண்டாம்!

தள:— எமலோகத்தில் நடைபெறும் உபச்சாரத்தைச் சரிவர ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

திர:— என்ன தண்டனை?

தள:— பூலோகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகப் பிறக்க வேண்டும்!

திர:— ஐய்யோ! வேண்டாம்! வேண்டாம்! உபச்சாரத்தை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். கொடுங்கள் கிண்ணங்கள்!

(திரவியம்பிள்ளை மது அருந்த மயக்கம் ஏற்படுகிறது)

தள:— ஆகாஷ்வாணி!

(அவலட்சணமான ஒரு பெண் வருகிறாள்)

ஆகா:— உஸுர்!

தள:— (திரவியம்பிள்ளையிடம்) இவள்தான் எமலோகத்தின் இசைக் குயில்! ஆகாஷ்வாணி! இவரைக் கவனித்துக் கொள்!

ஆகா:— அச்சா!

(திரவியம்பிள்ளை ஆகாஷ்வாணியைய் பார்க்கிறார். பிள்ளைக்கும் வாணிக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் ஆடிப்பாடுகிறார்கள்)

திர:— ஆகா! அழகுப் பதுமையே! அணங்கே! தேடக் கிடைக்காத திரவியமே! தேன் மொழியே! தித்திக்கும் கனியே! தெள்ளமுதே!

(ஆகாஷ்வாணியைக் கட்டிப் பிடித்தல்)

தள:— ஐயோ!

(அருவெறுப்புடன் போகிறான்.)

(அப்போது எமன் வருகிறார்.)

எம:— என்ன திரவியம்பிள்ளை! உபசரிப்புகளெல்லாம் சரிவர நடந்ததல்லவா!

திர:— ஆகா! நன்றாக நடந்தது. உபசரிப்பின் உச்சக்கட்டமே ஆகாஷ்வாணியின் பிரவேசம்தான்! ஆகா! வர்ணிக்கவே முடியாது!

எம:— உம்மோடு நீண்ட நேரம் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தும் நிறைவேற்ற இயலாது போய்விட்டது. குறுகிய காலத்திலேயே நமது பேட்டி முடியும்.

எம:— நீ (தளபதியைப் பார்த்து) உடனே சென்று இன்று நமதுசபை கூடுவதற்கு வசதியில்லை; ஏனெனில் வரியைப் பற்றி விளக்கம் தெரியாமல் சபை கூடிப் பயனில்லை. ஆகவே நாளைக்காலையில் சபை கூடுமென்று அறிவித்துவிடு!

(தளபதி போகிறான்)

எம:— நமது பேட்டியை ஆரம்பிக்கலாமா?

திர:— ஆரம்பிக்கலாம்!

எம:— எப்படி உமக்குத் திரவியம் பிள்ளை என்று பேர் வந்தது?

திர:— பணம் நிறைய இருக்கிறது அதனால்—

எம:— இம்! உங்கள் நாட்டில் கீரிப்பிள்ளை என்பது யார்?

திர:— அது ஒரு பிராணி! பாம்புக்கு விரோதி!

எம:— நீரும் பிள்ளைதானே? நீர யாருக்கு விரோதி?

திர:— )4( الم الم اهم

எம:— தென்னம்பிள்ளை என்பது ராஜ்யத்தில் உண்டல்லவா?

திர:— ஆமாம்; அதுதான் பூலோகத்தில் கற்பக விருட்சம்!

எம:— என்ன! ஒரு பிள்ளை—பிராணி! ஒரு பிள்ளை—மரம்! போகட்டும், அணில் பிள்ளை என்பது யார்?

திர:— அதுவா! அதுதான் ராமருக்காகப் பாலம் கட்டிய ஐந்து!

எம:— ஒ! உங்கள் நாட்டில் அணில்கூடப் பாலம் கட்டுமா? அரசாங்கம் கட்டாதோ?

திர:— U! U! U!

எம:— இருக்கட்டும்! கிளிப்பிள்ளை என்றால் என்ன?

திர:— அதுவா? அது சொன்னதையே சொல்லும் ஒருபறவை.

எம:— என்ன சொல்லும்! ஆகட்டும் பார்க்கலாம் ஆகட்டும் பார்க்கலாமென்றுதானே!

திர:— اهم اهم اهم

எம:— தேசீயம்பிள்ளை என்கிறீரே; நீர் இந்த நான்கு பிள்ளைகளைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர்.

திர:— நான் உயர்திணை. அதுகள் அக்றிணைப் பிராணிகள். வெறும் உயிர்கள். பகுத்தறிவு இல்லாத ஐந்துகள்.

எம:— பகுத்தறிவு என்றால் என்ன?

திர:— சிக்கலான கேள்வி! புலோகத்தில் அந்தக் கழகத்துக்காரர்கள் என்னைப்பார்த்துக்கேட்ட கேள்வியைத் காங்களும் கேட்கிறீர்கள். இங்கும் விடவில்லையே எனக்கு இந்தச் சங்கடம்!

எம:— வரியைப்பற்றிய விளக்கத்தை சொல்லும்!

திர:— வரி என்றால் எங்கள் ராஜ்ஜியத்தில் காங்கிரஸ் என்று அர்த்தம்!

எம:— காங்கிரஸ் என்றால்?

திர:— தியாகம் என்று அர்த்தம்.

எம:— தியாகம் என்றால்?

திர:— பதவி! பர்மிட்! லைசென்சு! இப்படிப் பல அர்த்தங்கள்.

எம:— வரி என்பது கருப்பு நிறமா; சிவப்பு நிறமா? அதன் உண்மை நிறமென்ன?

திர:— வரிக்கு ஒரு நிறமா, இரு நிறமா? அது பஞ்ச வர்ணம் கொண்டதல்லவா?

எம:— பஞ்சமென்றால் தரித்திரமென்பார்களே?

திர:— ஆமாம் அதே நிறந்தான் வரியின் நிறமும்!

எம:— சரி! வரியினால் என்ன நன்மை?

திர:— மக்கள் பெருக்கம் குறையும். ஜன நெருக்கம் குறைந்து கலகலப்பாக இருக்கும்.

எம:— அப்படிப்பட்ட வரியை எமலோகத்திலும் அமுலுக்குக் கொண்டு வந்தால்!

திர:— இங்கும் நெருக்கடி குறைய வழி ஏற்படும்!

எம:— உங்கள் ராஜ்யத்தில் வரிபோடுவதில் வல்லவர்கள் யார்?

திர:— நானேதான்! நான்தான் இங்கு வந்து விட்டேனே!

எம:— குறிப்பாக எந்தெந்தப் பொருள்கள் மீது வரி போடலாம்!

திர:— அழுகும் பொருள்மீது வரி போடுவது சாலச் சிறந்தது!

எம:— எங்கள் நாட்டில் அழுகும் பொருள்கள் என்ன!

(யோசித்து)

பிணங்கள்! பிணங்கள்! வரி போடலாம்!

திர:— உங்கள் நாட்டு அழுகும் பொருள்களான பிணங்களுக்கு வரி போடுகிறேன் என்கிறீர்களே, அதனால் எதிர்ப்பு ஒன்றும் ஏற்படாதே?

எம:— எதிர்ப்பா? வரி போட்டால் எதிர்ப்புக் கூட ஏற்படுமா? எமதர்மன் ஆட்சியில் எதிர்ப்புகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?

திர:— என்ன தண்டனை?

எம:— உடனடியாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள். அதோடு முடியாது தண்டனை. பூலோகத்தில் மீண்டும் பிறந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல; அவர்கள் தேர்தலில் அபேட்சகர்களாக நின்று பணம் கொடுத்து ஓட்டு வாங்கித் தங்கள் கௌரவத்தைக்காப்பாற்றிக் கொண்டாக வேண்டும்! அது போகட்டும். பிணவரிக்குப்பிறகு எந்த வரி போடலாம்? அந்த யோசனையைச் சொல்லும்.

திர:— எங்கள் தேசத்தில் போடாமல் இருக்கிற வரிகளை மட்டுமே விரல்விட்டுச்சொல்ல முடியும். போட்டிருக்கிற வரிகளின் பட்டியலை ஞாபகப் படுத்திக் கூறுவது சிரமம்.

எம:— அப்படி வரி போடாத பொருள் என்னென்ன?

திர:— அத்திப்பூ—குதிரைக் கொம்பு—சேவல் முட்டை—இத்யாதிப் பொருள்களுக்கு எங்கள் நாட்டில் வரிவிலக்கு செய்யப் பட்டிருக்கிறது.

எம:— சபாஷ்! அவைகளுக்கும் சேர்த்து நான் வரி போட்டுவிடுகிறேன்! ஒன்று கேட்க மறந்து விட்டேன். உங்கள் ராஜ்யத்தில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற பெரிய மந்திரவாதி இருக்கிறாராமே அவர் மிகவும் கெட்டிக்காரரா? அவரை இங்கு அழைத்து வரலாமென்று பொதுவாகவே ஒருஅபிப்பிராயம் உலவுகிறது. அழைத்து வரத் தகுதியுடையவர் தானா?

திர:— அவர்இன்னும் இங்கு வரவில்லையா? எனக்கு முன்பே இங்கு வந்து விட்டாரென்று கேள்விப்பட்டேன்.

எம:— இல்லை... இல்லை! உம்மைக் கேட்டுக் கொண்டுதான் வரலாமென்ற எண்ணம்.

தே:— பெரிய மந்திரவாதிதான். பெயரைக் கேட்கத்தான் பயமாக இருக்குமே தவிர ஆளைப் பார்த்தோமானால் தேவாங்கு மாதிரி இளைத்துப் போயிருப்பார். அவருக்கு யானைப்பசி வேறு! ஆயிரக்கணக்கில் நூற்றுக் கணக்கில் சாப்பிடுவதில்லை! எல்லாம் கோடிக்கணக்கில்தான் வயிற்றில் போட்டு அடைப்பார்! அவர் எங்கள் ராஜ்யத்தில் ஆஸ்தான மந்திரவாதியாக இருப்பதால் ஊழல் என்ற தொத்து வியாதி பரவுகிறதே தவிர பயனொன்றும் கிடையாது. தயவுசெய்து அவரை இங்கு அழைத்துக் கொள்ளுமாறு நான் பலத்த சிபாரிசு செய்கிறேன்.

எம:— இன்றைக்கு நமது பேட்டி இத்தோடு இனிது முடியட்டும்! ஏதாவது தேவையிருந்தால் தெரிவிக்கலாம்!

திர:— தேவை ஒன்றும் பிரமாதம் இலை! என்னை இந்த உல்லாச மண்டடத்திலிருந்து விடுவக்க வேண்டும். அடுத்த படியாக நான் மகாத்மா காந்தியைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் தர வேண்டும்!

எம:— அவசியம் காந்தியைப் பார்த்தாக வேண்டுமரி அவர் சொர்க்க மெனும் பாதாளச் சிறையில் அல்லவா கிடக்கிறார். அந்த முதல் வகுப்புக்கைதியை நரகலோகத்து மூன்றாவது வகுப்புக்கைதியாகிய நீர் சந்திப்பது இயலாத காரியமாயிற்றே!

திர:— எப்படியோ கிருபை வேண்டும்! காந்தி மகானை நான் அங்கு அடப்பார்த்ததில்லை. அந்த மகானை நான் பார்த்தால் தான் ஆவல் தீரும்!

எம:— சரி ஏற்பாடு செய்கிறேன்! புறப்படும்.

திர:— மாலை வேண்டுமே?

எம:— மாலை தானே, வாங்கிக்கொள்ளலாம்.

(இருவரும் போதல்)

(திரை)