காட்சி 60 / 61
காட்சி 60]
காட்சி 60]
மூல ஸ்கேன் 183
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
பலதேவர், பூங்காவனம், சாமியார், சுகதேவ், முதியோர் வரும் பல்லக்கு வண்டிகள் வேகமாக வருகின்றன. அவர்களின் வேகத்தைப் பார்த்தால் கட்டாயம் முத்தனை மீட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.
தூக்குமேடையை நோக்கி முத்தன் அடி பெயர்த்து வைக்கிறான். அவன் கடந்த பாதையை இனி மீண்டும் பார்க்கவே முடியாது. தூக்குமேடை அவன் வாய்பிளந்து வரவேற்கிறது, தூரத்திலே—கண்ணை மறந்து, முத்தாயி காதல் கீதத்தைப் பாடிக்கொண்டே யிருக்கிறாள். அப்பப்பா—அவள்தான் பாடுகிறாளா? சோகமே யாழாக உருவெடுத்து இசை பொழிகிறதா? இந்த கீதத்திலே மனதைப் பறிகொடுத்தபடியே முத்தன் நடக்கிறான். அவன் முகம் மூடப்படுகிறது. உலகம் மறைந்துவிட்டது அவனுக்கு! ‘தடார்’ என ஒரு சப்தம். அந்த சப்தம் முத்தனின் உயிரைப் பிரித்துக்கொண்டு போய்விட்டது. இனி அவனுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ஏழை முத்தன் இடர் நிறைந்த உலகை விட்டு விடுதலைபெற்று விட்டான்.
★