பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 56 / 61

காட்சி 56]

காட்சி 56]

மூல ஸ்கேன் 164

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[சுமதி வீடு, தெருப்பக்கம்

முத்தன் — வேகமாக வந்து கொண்டிருக்கிறான், சுமதியின் வீட்டிலிருந்து இறங்கி! அவன் ஒரு குரல் அழைக்கிறது. திடுக்கிட்டுத் திரும்புகிறான். சுகதேவ வருகிறான். முத்தன் பயந்து விடுகிறான்.

சுகதேவ்: பயப்படாதே முத்தா!

முத்தன்: என்ன விஷயம்?

சுகதேவ்: வேதாளம் சாமியார் வேஷத்தில் அலைகிறான்.

முத்தன்: அதற்கென்ன இப்போது?

சுகதேவ்: என்னுடைய காதலி முத்தாயியை ஏமாற்றி ஏதோ என்னமோ தெரியவில்லை; அவன் அழைத்துக்கொண்டு எங்கேயோ போகிறான்.

முத்தன்: ஆ!—

சுகதேவ்: அவனுடைய ஆஸ்ரமத்துக்குத்தான் போயிருப்பான். என்னோடு வா! காட்டுகிறேன் — தயவு செய்து நீ முத்தாயியைப் பார்த்துக்கொள். நான் உடனே போய், இந்த ஊரிலுள்ள பாதுகாப்பு வீரர்களை அழைத்து வருகிறேன்.

முத்தன்: முதலில் முத்தாயி இருக்குமிடத்தை காட்டும்!

சுகதேவ்: வா வா!—

[இருவரும் ஓடுகிறார்கள்]