பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 55 / 61

காட்சி 55]

காட்சி 55]

மூல ஸ்கேன் 162, 163

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[வேதாளத்தின் இருப்பிடம்

உள்ளே போர்வையினுள் ஒரு உருவம் மூட்டப் பட்டு கிடக்கிறது. வேதாளமும் முத்தாயியும் உள்ளே நுழைகிறார்கள். தன்னுடைய உயிரினு மினிய அத்தான் சாவின் ஓரத்திலே யிருக்கிறான் என்ற செய்தி கேட்டு ஓடிவரும் முத்தாயியின் அச்சம் நிரம்பியகண்கள் அந்த மூட்டப்பட்ட உருவத்தைக் காண்கின்றன.

வேதாளம்: அதோ உன் காதலன்.

[உருவம், முத்தாயி என முனகியபடி யிருக்கிறது.]

முத்தாயி, அத்தான் என வீறிட்டலறியவாறு அவனிடம் ஓடுகிறாள், போர்வையை நடுங்கும் கரங்களால் எடுக்கிறாள். கலகலவென சிரித்தபடி வெற்றிவேலன் எழுகிறான். வேதாளம் வெளியே போய்விடுகிறான். முத்தாயியின் நிலைமையை எப்படித்தான் எழுத்தால் சொல்ல முடியும். நான்கு பக்கமும் வேடர் சுற்றிட நடுவில் சிக்கியமான்போலாகிவிட்டாள்.

வெற்றிவேலன்: முத்தாயி! முழுங்கிவிடே......என் பயப்படுகிறாய்......உன் அருகே!......

முத்தாயி: தளபதி வெற்றிவேலன். நாடுகாக்க வேண்டிய நீங்கள் இப்படி நடத்தொரு நாராயணன் ஆகி விட்டீர்கள்... வேண்டாம்; நான் உங்கள் சகோதரி ......விட்டு விடுங்கள்.

வெற்றிவேலன்: மலரும் வண்டும் சகோதரர் என்றுல மடையர்கள் தான் நம்புவார்கள். கண்ணே!...

முத்தாயி: ஓ .. விடு என்னை! வெட்கங் கெட்டவனே. விஷப்புழுவே! உன் காமச் சூறாவளியிலே கவிழ்ந்து விடும், மரமல்ல நான்.

வெற்றிவேலன்: திட்டு! நன்றுகத்திடு! எழுத்துக்கு எழுத்து தித்திக்கிறது. திட்டு! கூண்டிலே அடைப்பட்ட கிளி கத்துவது கோபத்தால் அல்ல. பயத்தால். அதுவும் பழகப்பழக சரியாகிவிடும்.

முத்தாயி: நெருங்காதே.

வெற்றிவேலன்: இந்த நாட்டின் சேனத்தலைவன் அழைக்கிறேன், என் ஆணுக்கு அடங்காதவர்கள் என்ன ஆவார்கள் தெரியுமா?

முத்தாயி: கொன்று விடுவாய். அவ்வளவு தானே, சாவுக்கு பயப்பட மாட்டேன். சாவு உன்னைவிடக் கோரமானதா? இல்லை. இல்லை. ஒருக்காலுமில்லை.

வெற்றிவேலன்: முத்தாயி. இரும்பு போன்ற என் கரங்களிலேயிருந்து தப்பிய மலர்கள் எதுவுமே கிடையாது! ஞாபகம் வைத்துக்கொள்!

முத்தாயி: என்னை விட்டுவிடு; அக்கிரமக்காரா!—

வெற்றிவேலன்: அக்கிரமம் என்ற அச்சாணியிலே தான் அகில உலகமும் சுற்றுகிறது.

முத்தாயியின் கையைப் பிடித்து இழுத்து விடுகிறான். அவள் சுற்றிக் கீழே விழுகிறாள் அலறியபடியே!—நெருங்கிய

வெற்றிவேலன்: முத்தாயி! இனிமேல் நீ தப்பவே முடியாது - நீயாகவே இணங்கிவிடு!—

அவளைத் தொடுகிறான் - முத்தாயி எழுந்து ஓடிப்போய் கதவில் முட்டிக் கொள்கிறாள்.