பொருளடக்கம்இரத்தக் கண்ணீர்

காட்சி 53 / 61

காட்சி 53]

காட்சி 53]

மூல ஸ்கேன் 160

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[சுமதி வீடு இரவு நேரம்

முத்தாயி மட்டும் படுத்திருக்கிறாள். தெருவிலே ஒரு குரல். முத்தாயி எழுந்துவந்து பார்க்கிறாள். சாமியார் வேடத்திலே வேதாளம் நிற்கிறான்.

முத்தாயி: யாரய்யா என்ன வேண்டும்.?

வேதாளம்: இங்கு முத்தாயி என்பது யார்?

முத்தாயி: ஏன் - என்ன விசேஷம்?

வேதாளம்: சுமதியம்மாள் சொல்லச் சொன்னார்கள் - முத்தன் என்பவருக்கு எதிரிகளால் தாக்குதல் ஏற்பட்டு, மரணவஸ்தையில் ஒரு வீட்டில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

முத்தாயி: ஆ! அத்தான்!—

வேதாளம்: நீங்கள் தானா முத்தாயி? என்னோடு வந்தால் அவரை உயிரோடு பார்க்கலாம்.

முத்தாயி: அத்தான் அத்தான்!... ஐயா அவர் எங்கே யிருக்கிறார் - என்னை அழைத்துப் போங்கள்.

நரியின் பின்னே - மான் தொடருகிறது. வேதாளத்தின் பின்னே முத்தாயி ஓடுகிறாள். இதை ஓரிடத்தில் ஒளிந்து நிற்கும் சுகதேவன் பார்த்து செய்வதறியாமல் பெருமூச்சுவிடுகிறான்.