காட்சி 52 / 61
காட்சி 52]
காட்சி 52]
மூல ஸ்கேன் 159
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[தனவணிகர் வீடு
தனவணிகர் வீட்டுவாயிலில் உட்கார்ந்திருக்கிறார். சுமதி வருகிறாள்.
தனவணிகர்: யாரம்மா நீ?
சுமதி: இங்கு பொன்னன் என்று ஒருவர் வேலை செய்கிறார் அல்லவா?—
தனவணிகர்: ஆமாம்—அவன் வெளியே போயிருக்கிறான்.
சுமதி: அவர் மனைவி என் வீட்டில் இருக்கிறாள். அவர் வந்ததும் என் வீட்டுக்கு உடனே வரச் சொல்லுங்கள்.
தனவணிகர்: உன்வீடு எங்கேயிருக்கிறது.
சுமதி: அடுத்ததெரு ஐம்பது எண்ணுள்ள வீடு.
தனவணிகர்: வந்தால் வரச் சொல்கிறேன் போ!
★