காட்சி 51 / 61
காட்சி 51]
காட்சி 51]
மூல ஸ்கேன் 158
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[வேதாளத்தின் இருப்பிடம்
சுகதேவ் எங்கேயோ போய்விட்டு வந்து கதவைத் தட்டுகிறான். உள்ளே வேதாளம், தாடி ஒட்டிக் கொண்டிருக்கிறான், அருகே வெற்றிவேலனும் அமர்ந்திருக்கிறான்.
சுகதேவ்: சாமி! சாமி!!
வேதாளம்: பொறு! இன்னும் நிஷ்டை முடியவில்லை.
சுகதேவ்: கதவைத் திறவுங்கள் சாமி!
வேதாளம்: முட்டாள்தா இரு! கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்! முத்தாயி விஷயம் பற்றி!—
சுகதேவ்: (தனக்குள்) ஆகா—கடவுளோடு பேசுகிறாரா?—நாம்தான் பகவானைப் பார்க்க முடியாது; பாப ஆத்மா! சாமியார் பேசும்போதாவது ரகசியமாகப் பகவானைப் பார்த்து விடுவோமே!—
என்று சொல்லிக் கொண்டே கதவின் ஓட்டை வழியாக உள்ளே பார்க்கிறான். அவ்வளவுதான் அவனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது.
சுகதேவ்: ஐயய்யோ தவசி! வேதாளம், மறுபடியும் முருக்கமரம் ஏறுகிறது—நல்ல வேளை—நான் பிழைத்தேன்—பிழைத்தேன்.
என்று அலறியபடி அதை விட்டு ஓடுகிறான்.
★