காட்சி 48 / 61
காட்சி 48]
காட்சி 48]
மூல ஸ்கேன் 153
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[தனவணிகர் வீடு
குழந்தையுடன் தனவணிகர் உள்ளே நுழைகிறார். அவரது மனைவி குழந்தையை வாரியணைத்துக் கொண்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறாள். அவளும் கேட்கவில்லை; முத்தாயி எங்கே என்று! கேட்பதற்கு ஒருவன் இருக்கிறானே; உரிமை படைத்தவன் அவன் கேட்கிறான்.
தனவணிகர்: நான் போகவில்லை யென்றால் குழந்தை அவ்வளவு தான்! காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து...
முத்தன்: ஆ! முத்தாயி எங்கே?
தனவணிகர்: அடடே!... நான் அவசரத்தில் அவளை மறந்தே விட்டேன்.
முத்தன்: மறந்து விட்டீர்கள்; என் மனைவியை மட்டும் அல்ல; உங்கள் சீமான் இனம்; இரக்கமெனும் ஒரு பண்பையே மறந்து பல நாளாயிற்று!
வேகமாக ஓட ஆரம்பிக்கிறான். வீட்டுக்காரர் கண்ணில் படும் வரையில் நொண்டி போல ஓடுகிறான். பிறகு பொன்னன் ஓடவில்லை; முத்தனே ஓடுகிறான்!
★