காட்சி 40 / 61
காட்சி 40]
காட்சி 40]
மூல ஸ்கேன் 136
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[வேதாளத்தின் அஞ்சல்மனை
வேதாளம் ஓலைகளைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அஞ்சலோடி பக்கத்திலே அமர்ந்து வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கிறான். வேதாளம் ஒரு ஓலையை அவசரமாகப் பிரிக்கிறான். அது:
“அன்புள்ள திருசங்குவுக்கு சுகதேவ் எழுதியது. முத்தாயி என்னிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டாள். அவளைத் தேடிக் கண்டு பிடிக்கும் வரையில் ஊருக்குத் திரும்பமாட்டேன். அவளைக் கண்டுபிடிப்பேன். இல்லாவிட்டால் சந்நியாசியாகி விடுவேன். அவளை எனக்கு மண முடிக்க நீர் இவ்வளவு கஷ்டப்பட்டும் முடியாமல் போய்விட்டது. பிற பின்னர்.
சுகதேவன்”
அந்த ஓலையை எடுத்துக்கொண்டு, வேதாளம் புறப்படுகிறான். அவனது சூழ்ச்சி மூளை மீண்டும் வேலை செய்யத் தொடங்கி விட்டதை அவனது கழுகுப் பார்வை நன்றாக உணர்த்தியது. எங்கே இவ்வளவு வேகமாகவும்—ஆனந்தமாகவும் போகிறானோ தெரியவில்லை—பொறுத்திருந்து பார்ப்போம்.
★