காட்சி 39 / 61
காட்சி 39]
காட்சி 39]
மூல ஸ்கேன் 134, 135
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பாழடைந்த கோவில்
முத்தனும், முத்தாயியும் - ஒரு பாழடைந்த கோவிலின் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள்.
முத்தாயி: தாங்கள் வந்து என்னை விடுவிப்பீர்கள் என்ற செய்தி எவ்வளவு மகிழ்ச்சி தந்தது தெரியுமா?
முத்தன்: உன்னை மீண்டும் அடையப் போகிறேன் என்ற உணர்ச்சி எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஊட்டியது என்று உனக்குத் தெரியுமா?
முத்தாயி: இல்லை—என்னுடைய மகிழ்ச்சிதான் அதிகம்.
முத்தன்: இல்லை—வைரத்தின் ஜொலிப்பைவிட அதை அணிந்து கொள்பவரின் சிரிப்பில்தான் ஜீவன் அதிகம். நீ வைரம்—நான் அணிந்துகொள்பவன்.
முத்தாயி: அத்தான்—அதிருக்கட்டும்; நம்முடைய அடுத்த திட்டம் என்ன?—இந்தக் கோவிலிலேயே குடியிருப்பதா?—இந்த அழகான தேவதைகளை என்னால் பார்க்கவே முடியவில்லை.
முத்தன்: இந்த நாட்டில் எங்கிருந்தாலும் நம்மைப் பிடித்துவிடுவார்கள்.
முத்தாயி: பிறகு எங்குதான் போவது?
முத்தன்: சிறுத்தையூர் போய்விட்டால்—நாம் தப்பிவிடலாம். அது வேறு நாடு—வேங்கை புரத்தானுக்கு விரோதமான நாடு! அங்கே வெற்றிவேலன் அதிகாரம் செல்லாது!
முத்தாயி: சரி—அங்கு செல்லுகிறோம்—நம்மை ஒற்றர்கள் என்று நினைத்து—அந்த நாட்டார் பிடித்து விட்டால் என்ன செய்வது?
முத்தன்: ஆமாம்—அதுவும் யோசிக்க வேண்டியதுதான்.
முத்தாயி: சரி எழுந்திருங்கள்—இருட்டுவதற்குள் எங்கேயாவது சென்று ஒருவழி பார்க்கலாம்.
இருவரும் அதைவிட்டுப் புறப்படுகிறார்கள்.
★