காட்சி 33 / 61
காட்சி 33]
காட்சி 33]
மூல ஸ்கேன் 107
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[பழுதூர் அஞ்சல்மனை
வேதாளம், அஞ்சற் பையைப் பிரித்து உள்ளேயிருக்கும் ஓலைகளைக் கவனித்தபடியிருக்கிறான். திடீரென ஒரு ஓலையின்மீது அவன் கண்கள் பாய்கின்றன.
"ஆங்! அகப்பட்டுக்கொண்டார்கள்" என்று குதித்தபடி அந்த ஓலையைப் படிக்கிறான்.
ஓலையாவது:
"அன்புள்ள திருசங்குவுக்கு சுகதேவ் எழுதியது. வேங்கைபுரத்திற்கு அருகில் ஐம்பது கல் தூரமுள்ள—ஆனந்த நகரில் தங்கியிருக்கிறேன். இங்குள்ள கண்ணாடி மாளிகையை நமது திருமணத்திற்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். நீர் உடனே முத்தாயியை அழைத்துக் கொண்டு இங்கு வந்து சேரவும். திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். உடனே புறப்படவும்.
சுகதேவன்"
ஓலையைப் படித்து முடித்ததும் வேதாளத்திற்கு பூரிப்பு பொங்குகிறது. அதே சமயம் அவன் உள்ளத்தில் சூழ்ச்சி உருவாகிறது என்பதை அவன் விகாரமுகத்தில் எழும் ரேகைகள் விளக்குகின்றன.
"சுகதேவுக்கும்—முத்தாயிக்கும் திருமணம்!—வேதாளத்தின் யோசனைப்படி. வெற்றிவேலனின் ஜெயத்திற்காக நான் போட்ட திட்டம் பாதி நிறைவேறிவிட்டது. பாவம்—எலிப்பொறியைத் தேடிவரும் எலிகள்; சுகதேவ்—திருசங்கு! வேதாளம்! உனக்குச் சரியான பரிசு காத்திருக்கிறது. வெற்றிவேலனின் கையிலே முத்தாயி—வேதாளத்தின் கையிலே முத்துக் குவியல்! சபாஷ்! சபாஷ்!"
வேதாளம் துள்ளி எழுகிறான்.
★