காட்சி 24 / 61
காட்சி 24]
காட்சி 24]
மூல ஸ்கேன் 84
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[அஞ்சல்மனை வாயில்
முரட்டு மனிதன்—அஞ்சலோடி. குதிரை தேய்த்துக் கொண்டிருக்கிறான். அங்கே சுமதி கையிலே பொன் மூட்டையுடன் வருகிறாள்.
சுமதி: அய்யா!
அஞ்சலோடி: என்னம்மா வேண்டும்?
சுமதி: முத்தன் இங்கில்ல?
அஞ்சலோடி: முத்தனா? அவன் மிகவும் நல்லவனாயிற்றே. அவனை ஏன் நீ தேடுகிறாய்—நீ அவனைக் காதலிக்கிறாயா?
சுமதி: போக்கிரி மனிதா! கேட்டதற்கு மட்டும் பதில் சொல்.
அஞ்சலோடி: அவன் தென்றல் மாளிகையில் இருக்கிறான். அவனுக்கென்ன, போர்வீரன். அவனுக்குத் தகுந்தவள் தான் நீ......
சுமதி: மூடிக்கொள் உன் அழகான வாயை! அப்பனே!
அஞ்சலோடி: மகளே!
சுமதி: முத்தன் தவறி இங்கு வந்தால், ஒரு பெண் தேடிக்கொண்டு தென்றல் மாளிகைக்குப் போயிருப்பதாகச் சொல்!
அஞ்சலோடி: இது உத்திரவா? வேண்டுகோளா?
சுமதி: இரண்டுந்தான்—சரியான முட்டாள்!
[போகிறாள்]
அஞ்சலோடி: என்ன என்ன? ... ஏ, சிட்டுக் குருவி—இப்போது என்ன பேசினாய்?
சுமதி: தமிழ் பேசினேன்...... ஏ, தலைவலி! போய் வருகிறேன்.
சுமதி வேகமாக அதைவிட்டுப் போகிறாள். அவள் போவதையே அஞ்சலோடி பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
★