காட்சி 22 / 61
காட்சி 22]
காட்சி 22]
மூல ஸ்கேன் 81
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[திருசங்கு வீடு
முத்தாயி — சுமதி, இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முத்தாயி: இந்நேரம் அவர் போய் சொல்லியிருப்பார்; படையிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று!
சுமதி: அவர் சொல்லாவிட்டாலும் உன்னுடைய சுந்தர வதனம், அவரை சொல்லவைத்திருக்குமே!
முத்தாயி: ஆரம்பித்துவிட்டாயம்மா! அப்பா வரும் நேரமாகிவிட்டது!... இந்தா சுமதி, ஜாக்கிரதை.
[நூறு பொன் கொண்ட பையை அவளிடம் கொடுக்கிறாள்]
காலையில் அவரிடம் சேர்த்துவிடு! அவர் எங்கேயிருக்கிறார் தெரியுமல்லவா?
சுமதி: தெரியும்.
முத்தாயி: எங்கே?
சுமதி: உன் இருதயத்தில்—
முத்தாயி: விளையாடாதே சுமதி — அஞ்சல் மண்ணில் தான் அவர் இருப்பார். அவர் இல்லாவிட்டாலும் வேதாளத்திடம் கொடுத்து, அவரிடம் கொடுத்து விடச் சொல்லு!...
சுமதி: உத்திரவுப்படியே!...
முத்தாயி: சரி போய்விட்டு—அப்பா வந்துவிடுவார்.
★