காட்சி 19 / 61
காட்சி 19]
காட்சி 19]
மூல ஸ்கேன் 68
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[தென்றல் மாளிகை.
வெற்றிவேலன், வேதாளம் முன்னிலையில் முத்தன், படையில் பெயரைப் பதிவு செய்கிறான்.
வெற்றிவேலன்: பெயர்?
முத்தன்: முத்தன்.
வெற்றிவேலன்: தகப்பனார் பெயர்?
முத்தன் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறான்.
வேதாளம்: அது ஒன்றுக் தேவையில்லை.
வெற்றிவேலன்: ஓகோ!... சரி. தாயார் பெயராவது தெரியுமா?
முத்தன்: தாயார் காவேரி—இறந்துவிட்டார்கள்.
வெற்றிவேலன்: சரி—கையொப்பமிடு.
ஓலைபோன்றில் முத்தன் கையொப்பமிடுகிறான். அப்போது தன் காதலியின் நினைவில், ‘முத்’ என்று எழுதியபிறகு, “தாயி” என்று எழுதி—‘முத்தாயி’ என்று எழுதிவிடுகிறான். பிறகு திருத்தி, முத்தன் என்று எழுதுகிறான்.
வெற்றிவேலன்: உம்—பயப்படாமல் போடு!
★